ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்
கிஷ்துவார்: ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். தப்பியோடிய பயங்கரவாதிகளை ராணுவத்தினர் பல்வேறு குழுக்களாக தேடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் கிஷ்துவார் மாவட்டம் சிங்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதியில், பாதுகாப்பு படையினர் குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் குழுவினர், திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர்.
இரு தரப்புக்கும் இடையேயான இந்த சண்டை பல மணிநேரம் நீடித்தது. சண்டையில் பாதுகாப்பு படையினரில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவ வீரர் கஜேந்திர சிங் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் விரிவுபடுத்தி உள்ளனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும், சிஆர்பிஎப் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (9)
பேசும் தமிழன் - ,
19 ஜன,2026 - 21:29 Report Abuse
உள்ளூர் எட்டப்பன்கள் இல்லாமல்... தீவிரவாதிகளால் செயல்பட முடியாது..... தீவிரவாதிகளை சுட்டு கொல்வதற்க்கு முன்பு.... நாட்டின் உள்ளே இருக்கும் அவர்களின் ஆதரவாளர்களை களையெடுக்க வேண்டும். 0
0
Reply
பா மாதவன் - chennai,இந்தியா
19 ஜன,2026 - 19:56 Report Abuse
நம் நாட்டு பலன்களை அனுபவித்துக் கொண்டு பக்கத்து நாடு பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கும் எட்டப்பன்கள் இருக்கும் வரை இதுபோன்ற தேச துரோகிகளின் பயங்கர வாதம் தொடரும். எரியும் அடுப்பில் சுள்ளியை அதாவது எரிபொருளை எடுத்தால் கொதி அடங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, முதலில் இந்த எட்டப்பன்கள் ஒழிக்கப் படவேண்டும். களையை முதலில் தெற்கிலிருந்து ஆரம்பியுங்கள். நல்ல ராசி. நல்லதாக போகும். 0
0
Reply
Skywalker - ,
19 ஜன,2026 - 19:51 Report Abuse
Rest in peace soldier, your service to the motherland and your bravery will never be forgotten, Jai Hind 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
19 ஜன,2026 - 18:17 Report Abuse
பாக்கிஸ்தான் என்பது பஞ்சாபி சன்னி முஸ்லீம் சமூகத்திற்கு மட்டுமே. அங்கே உள்ள ஷியா, அஹமதியாஸ், சுபி, இஸ்மாயிலி போன்ற அனைத்து முஸ்லிம்களையும் அவன் கொள்கிறான். POK பகுதியில் ஷியாக்கள் பிச்சை எடுக்கும் நிலையை விட மிக மோசமாக உள்ளனர். ஆனால் அங்கே தீவிரவாதிகள் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்ற நிலைமை உள்ளது.
காஷ்மீரில் உற்பத்தி ஆகும் ஆறுகளுக்காக அங்கே பாக்கிஸ்தான் பிரச்சனை நடத்தி வருகிறான். அவன் அங்கே வெற்றி கொண்டால் அவன் ஷியாக்கள் அவ்வளவு போரையும் மேல் உலகத்திற்கு அனுப்புவான். காஷ்மீரில் தீவிரவாதம் நடந்த போது அங்கே 30 வருடம் ஷியாக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாட முடியவில்லை. மோடி 370 நீக்கிய பிறகே அவர்களால் கொண்டாட முடிந்தது. 0
0
Reply
M A Dass Dass - Bangalore,இந்தியா
19 ஜன,2026 - 18:07 Report Abuse
இது தி மு க சதிச்செயல் அல்லவா? 0
0
Reply
naranam - ,
19 ஜன,2026 - 17:23 Report Abuse
பாகிஸ்தான் மீது மேலும் பல நாட்கள் தாக்குதல் நடத்தி அவன் கொட்டத்தை ஒட்டு மொத்தமாக அடக்கும் வரை இது இப்படித் தான் தொடரும். இப்படியே எத்தனை வீரர்களை இழப்பது? 0
0
SANKAR - ,
19 ஜன,2026 - 19:20Report Abuse
when operation Sindhoor 2.0? 0
0
Reply
GMM - KA,இந்தியா
19 ஜன,2026 - 17:17 Report Abuse
போரில் ராணுவ வீரர்கள் இழப்பு தவிர்க்க முடியாது. உள்நாட்டில் தீவிர வாதிகள் மூலம் இழப்பை பொறுக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் மக்கள் வீடு விட்டு வெளியே செல்லுமுன் அரசு அனுமதி பெற வேண்டும். தகவல் தெரிவிக்க தவறும் நபர் மீது துப்பாக்கி சூடு. தீவிர வாதிகள் ஆதரவாளர்கள் குடியுரிமை நீக்கம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்க வேண்டும். பாகிஸ்தான், வங்கதேச நாடுகள் இந்தியாவிற்கு கப்பம் கட்ட ஐக்கிய நாடுகள் சபையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு நாடுகளை உலகில் இருந்து தனிமை படுத்த வேண்டும். இந்திய மக்கள் உயிர் இழப்பிற்கு முழு பொறுப்பு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். இதற்கு வலுவான நாட்டின் நட்பை பெற வேண்டும். 2026 ல் விடிவு பிறக்க வேண்டும். 0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
19 ஜன,2026 - 17:10 Report Abuse
தயவு தாட்சண்யமின்றி துவம்சம் செய்யவேண்டும். 0
0
Reply
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
Advertisement
Advertisement