கர்நாடகாவில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷனர் ஜி.எஸ். சங்கரேஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டி;
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் உள்ள 5 மாநகராட்சிகளுக்கான தேர்தல்கள் மே 25ம் தேதிக்கு பின்னர் நடைபெறும். இந்த தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். 10 மற்றும் பியூசி வகுப்புகளுக்கான தேர்வுகள் முடிந்த பின்னரே இந்த தேர்தல் நடத்தப்படும்.
இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களும் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தியே நடத்தப்படும். தேர்தல்களை நடத்த இரு சிறப்பான நடைமுறைகள் இருக்கின்றன. வாக்குச்சீட்டுகள் முறை ஆரம்பத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டன.
20, 30 ஆண்டுகளாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவது என்பது சட்டத்தாலோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளினாலோ தடை செய்யப்படவில்லை.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், வாக்குச்சீட்டு முறையை தேர்தலில் பயன்படுத்துகின்றன. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை தவிர்த்து, கிராம பஞ்சாயத்து, கூட்டுறவு தேர்தல்கள் என பெரும்பாலான தேர்தல்கள் ஓட்டுச்சீட்டுகளை கொண்டு நடத்தப்படுகின்றன. 2015ம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சித் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக நடத்தப்பட்டன.
மாநில தேர்தல் கமிஷன் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு மத்திய அரசின் அழுத்தம் காரணம் இல்லை. வாக்குச்சீட்டுகள் அல்லது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு தேர்தல்கள் நடத்த சட்டம் உள்ளதால், கமிஷனுக்கு முடிவு எடுக்கும் உரிமை உண்டு.
வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவது என்பது ஒரு தேர்வு. தற்போதுள்ள சூழலில் எது நல்லது என்பதை கருத்தில் கொண்டு வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவதே பொருத்தமானது என மாநில தேர்தல் கமிஷன் கருதியது. வாக்குச்சீட்டு முறை என்பது ஒரு சிறந்த நடைமுறை. உலகம் முழுவதும் இந்த நடைமுறை வெகுவாக பாராட்டப்படுகிறது.
இவ்வாறு தேர்தல் கமிஷனர் ஜி.எஸ். சங்கரேஷி கூறினார்.
இங்கே காங்கிரஸ் க்கு ஆதரவா , evm க்கு எதிரா எழுதுவதாக நினைத்துக்கொண்டு எழுதும் அறிவீலிகளே , ஒரு சமூக ஆர்வலர் பங்களாதேசிகளிடம் எப்படி நாட்டின் முக்கிய ஆவணங்கள் வந்தது என்பதனை புலனாய்வு செய்து வீடியோ வெளியிட்டார் காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்பதனை அறிய வேண்டுமா ? இதற்க்கு உங்கள் வீட்டு பெண்களை தமிழகத்தின் வடக்கில் இருக்கும் வங்கதேசத்தவனிடம் கூ கொடுக்கலாம்
வெட்டிவேலை .தேசம் முழுவதும் தொடர்ந்து இது போல தேர்தல் நடத்த கோரிக்கை வரும். மறுத்தால் உச்ச நீதி மன்றம் செல்வார்கள் .கள்ள ஓட்டுக்கு மட்டுமே இது துணை செய்யும் .
EVM மூலம் போடும் திருட்டு ஓட்டுக்கு என்ன பேர்?
ஏன் எலி தீடீர் என்று ஜீன்ஸ் பேண்டு போட்டுகொண்டு ஓடுகிறது ?மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்