இந்தியா வந்தார் யுஏஇ அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர் மோடி

11

புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், இன்று இந்தியா வந்தார். விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அவரை கட்டியணைத்து வரவேற்றார்.


மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபராக முகமது பின் ஜாயத் அல் நயான், இன்று( ஜனவரி 19) டில்லி வந்தார். விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி, அவரை கட்டியணைத்து வரவேற்றார். முகமது பின் ஜாயத் அல் நயான், யுஏஇ அதிபரான பிறகு இந்தியா வருவது இது மூன்றாவது முறையாகும்.


தொடர்ந்து இரு தலைவர்களும் ஒரே காரில் பயணம் செய்தனர். யுஏஇ அதிபரின் இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


Tamil News
Tamil News
இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பொருளாதாரம், வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் உறுதியான ஒத்துழைப்பு நீடிக்கும் நிலையில், அல் நயானின் இந்திய வருகை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் மத்தியில் அதிபர் அல் நயானின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement