ஆஸ்திரியாவில் பனிச்சரிவு: 8 பேர் பலி

வியன்னா: ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பரவியுள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் கடந்த சில நாட்களாக பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் இதில் சிக்கி ஒரு சிலர் உயிர் இழந்துள்ளனர்.


இந்நிலையில், ஆஸ்திரியாவின் பொங்காவு பகுதியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நேற்று முன்தினம்( ஜனவரி 17)இரண்டு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ்தர்வால்ட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி செக் குடியரசு நாட்டை சேர்ந்த3 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


தகவலறிந்த அவசர கால பேரிடர் மீட்புப் படையினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement