வர்த்தகப் போர்கள் யாருக்கும் உதவாது; அதிபர் டிரம்புக்கு சொல்கிறார் பிரிட்டன் பிரதமர்

4

லண்டன்:வர்த்தகப் போர்கள் யாருக்கும் உதவாது என வரி விதிக்கும் அதிபர் டிரம்பின் முடிவுக்கு பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.


கிரீன்லாந்தை ஆதரிக்கும் பிரிட்டன் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் அமெரிக்கா 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து, லண்டனில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நிருபர்களிடம் கூறியதாவது: வர்த்தகப் போர்கள் யாருக்கும் உதவாது.
கிரீன்லாந்தை கையகப்படுத்த அதன் நட்பு நாடுகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் முற்றிலும் தவறானது. வர்த்தகப் போர் அனைத்து தரப்பினரையும் சேதப்படுத்தும்.


நட்பு நாடுகளுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தைப் பயன்படுத்துவதற்கான யோசனையை நிராகரிக்கிறோம். வர்த்தக அச்சுறுத்தல்கள் மூலம் இறையாண்மை பிரச்னைகளை ஆணையிட முடியாது. கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் முடிவெடுக்கும் உரிமையை பிரிட்டன் ஆதரிக்கிறது. கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த முடிவுகள் அதன் மக்கள் மற்றும் டென்மார்க்கைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். வரி அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படக்கூடாது.


பிரிட்டன்-அமெரிக்க உறவு மிக முக்கியமானது. மேலும் அதை வலுவாகவும், ஆக்கப்பூர்வமாகவும், முடிவுகளில் கவனம் செலுத்தவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
பதட்டங்களைத் தணிக்க, பிரிட்டன் தற்போது பழிவாங்கும் வரிகளை விதிக்க பரிசீலிக்கவில்லை. நாங்கள் அந்த நிலைக்கு இன்னும் வரவில்லை. பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.

Advertisement