நாட்டு வைத்தியர் புத்தூர் கட்டு பாண்டி கைது

3


சிவகங்கை: சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சிங்கம்புணரியில் பாண்டியன் என்ற நாட்டு வைத்தியர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து தைலம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புத்தூர் கட்டு பாண்டி என்ற நெடுஞ்செழியன் நுட வைத்தியம் பாரர்த்து வந்தார். சமூக ஊடகம் வாயிலாக நேரலையில் சிகிச்சை அளித்து பிரபலம் ஆனார். இதனால், வெளிமாநிலம், , வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இவரை நாடி வந்தனர். ஒரு நாளைக்கு 60 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளித்தார். மற்றவர்களுக்கு 200 மில்லி அளவு கொண்ட தைல பாட்டிலை 600 ரூபாய்க்கு விற்றார்.


அவரது சிகிச்சை மற்றும் அவர் கொடுக்கும் தைலம் குறித்து சந்தேகம் எழுந்ததால் தேவக்கோட்டை சப்கலெக்டர் வெங்கட் வட்ஸ், திருப்புத்தூர் டிஎஸ்பி செல்வக்குமார், தாசில்தார் நாகநாதன் ஆகியோர், பாண்டியன் வீடு மற்றும் கிளினிக்கில் சோதனை நடத்தினர். அவர் பயன்படுத்திய தைலங்களை ஆய்வு செய்த பின்னர் பாண்டியனை கைது செய்தனர். தைல பாட்டில்களையும், தைலம் தயாரிக்க பயன்படுத்திய எண்ணெய் வகைகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement