டில்லியில் தமிழக பாஜ நிர்வாகிகளுடன் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை!

புதுடில்லி: டில்லியில், தமிழக பாஜ நிர்வாகிகளுடன் அக்கட்சியின் மேலிட தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதிகள் வெகு விரைவில் வெளியிடப்படும் என்ற சூழல் காணப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், பாஜ, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணியில் தமாகா, அன்புமணியின் பாமக ஆகிய கட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

இந் நிலையில், டில்லியில் மத்திய அமைச்சரும், பாஜ மேலிட தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு தீன் மூர்த்தி சாலையில் உள்ள பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்றது. ஆலோசனையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி கட்சிகள், தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

Advertisement