நடுரோட்டில் டயர் வெடித்து கவிழ்ந்த அரசு பஸ்: பயணிகள் 15 பேர் காயம்

6


வாடிப்பட்டி: அரசு பஸ்சின் பின்பக்க டயர்கள் வெடித்து, சக்கரங்கள் கழன்றோடியதால், பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.


மதுரை, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து இன்று காலை, 11:20 மணிக்கு, 50 பயணியருடன் பழநிக்கு அரசு பஸ் புறப்பட்டது. உசிலம்பட்டி சுப்புராஜ், 53, பஸ்சை ஓட்டினார். சமயநல்லுார் அருகே கட்டபுளி நகர் நான்கு வழிச்சாலையில் பஸ் வந்தபோது, பின்பக்க டயர்கள் வெடித்தன.


இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர மீடியனில் மோதியபோது, பின்பக்க டயர் கழன்றது. இதனால் சாலையின் குறுக்காக பஸ் கவிழ்ந்தது. டிரைவர் சுப்புராஜ் உட்பட 15 பேர் படுகாயமடைந்தனர். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement