தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு; நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய அறிவிப்பு
புதுடில்லி: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணம் செலுத்தி பயணிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருக்கிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை;
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண விலக்குகள், தள்ளுபடிகள், 2008ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின்படி நிர்வகிக்கப்படுகின்றன. விதி 11ன் படி, குறிப்பிட்ட வகை வாகனங்களுக்கும் நபர்களுக்கும், பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கூடுதலாக, விதி 9ன் கீழ், சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் உள்ளூர் வணிகம் அல்லாத வாகனப் பயனர்களுக்கான மாதாந்திர பாஸ்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் மாவட்ட அளவிலான சலுகைகள் குறைக்கப்பட்ட கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.
அனைத்து தேசிய நெடுஞ்சாலை பயணிகளும் அறிவிக்கப்பட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். தகுதி இருந்தால் மட்டுமே விலக்குகள் அல்லது தள்ளுபடிகள் பெற முடியும்.
அனைவருக்கும் சீரான, வெளிப்படையான மற்றும் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய சுங்கச்சாவடி பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் நெடுஞ்சாலை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்