குடியரசு தினம் அணிவகுப்பு; பாதுகாப்பை பலப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புதுடில்லி: 'குடியரசு தின அணிவகுப்பை காண கர்தவ்யா பாதைக்கு வரும் பார்வையாளர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து 'கூகுள் மேப்ஸ்' மற்றும் 'மேப்பிள்ஸ்' ஆகிய மொபைல் போன் செயலி வழியாக அறிந்து கொள்ளலாம்' என மாநகரப் போலீஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு: குடியரசு தினம், 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, தலைநகர் டில்லியில் முப்பைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு வரும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டியை இடங்கள் குறித்து கூகுள் மேப்ஸ் மற்றும் மேப்பிள்ஸ் ஆகிய மொபைல் போன் செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
போக்குவரத்து நெரிசல்
வாகனப் போக்குவரத்தை எளிதாக்க இந்த மொபைல் செயலிகளுடன் இணைந்து போக்குவரத்து பிரிவு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
அழைப்பிதழ் உள்ள விருந்தினர்கள் மற்றும் டிக்கெட் வைத்திருப்போர், கர்தவ்யா பாதைக்கு செல்ல தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை இந்த இரு செயலிகளிலும் அறிந்து கொள்ளலாம்.
இந்த வசதி குடியரசு தினம் மட்டுமின்றி, 29ம் தேதி படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சிக்கும் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
பார்வையாளர்களுக்கு உதவ பார்க்கிங் ஏற்பாடு தொடர்பான வீடியோக்களையும் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அனுமதிச்சீட்டு
மேலும், வாகனங்களில் வரும் பார்வையாளர்கள், 'க்யூ.ஆர்.,' குறியீட்டை பயன்படுத்தியும் வாகன நிறுத்துமிடத்தை அடையலாம். கர்தவ்ய பாதையை சுற்றி, 22 இடங்களில், 8,000 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாகன நிறுத்த அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் அதில் அச்சிடப்பட்டுள்ள க்யூ.ஆர்., குறியீடுகளை ஸ்கேன் செய்து இடத்தை அறிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பை பார்க்க, 77,000 அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.; அவற்றில், 8,000 வாகனங்களில் வருவோருக்காக ஒதுக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்