மாஸ்டர்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா ஏமாற்றம்
விஜ்க் ஆன் ஜீ: மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.
இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிபெக் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 60வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (கருப்பு), செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் (வெள்ளை) மோதிய மற்றொரு 2வது சுற்று போட்டி 56வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் (வெள்ளை), நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட் (கருப்பு) மோதிய 2வது சுற்று 33வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்டோர் தங்களது 2வது சுற்று ஆட்டத்தை 'டிரா' செய்தனர்.
இரண்டு சுற்றின் முடிவில் ஹான்ஸ் நீமன் (அமெரிக்கா), நோடிர்பெக் (உஸ்பெகிஸ்தான்), அர்ஜுன் (இந்தியா), தலா 1.5 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்