உலக விளையாட்டு செய்திகள்
பஹ்ரைன் அபாரம்
சபா அல்-சலேம்: குவைத்தில், ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 22வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் சீனா, பஹ்ரைன் அணிகள் மோதின. பஹ்ரைன் அணி 40-29 என்ற கணக்கில், 2வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு லீக் போட்டியில் ஈராக் அணி 26-21 என, ஜோர்டானை வென்றது.
ஜெர்மனி சாம்பியன்
பராக்: செக்குடியரசில், பெண்களுக்கான யூரோ ஹாக்கி உள்ளரங்கு சாம்பியன்ஷிப் 23வது சீசன் நடந்தது. பைனலில் செக்குடியரசு, ஜெர்மனி அணிகள் மோதின. ஜெர்மனி அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரிய அணி 3-2 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
'லாரஸ்' விருது எப்போது
மாட்ரிட்: மொனாகோவை சேர்ந்த தனியார் அமைப்பு சார்பில், சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கு 'லாரஸ்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இது, விளையாட்டிற்கான 'ஆஸ்கர்' என்று அழைக்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான இவ்விருது வழங்கும் விழா, வரும் ஏப். 20ல் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இங்கு, 2024-25ல் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எக்ஸ்டிராஸ்
* பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., மும்பை ஓபன் டென்னிஸ், வரும் பிப். 2-8ல் நடக்க உள்ளது. இதில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, பிரார்த்தனா, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, லுாலுா சன் (நியூசி.,), கிம்பர்லி பிரெல் (ஆஸ்திரேலியா) உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்கான தகுதிச் சுற்று வரும் ஜன. 30 - பிப். 1ல் நடக்கவுள்ளது.
* ஹரியானாவின் சோனிபட் நகரில் உள்ள விளையாட்டு பல்கலையில், கபடி சாம்பியன்ஸ் லீக் (கே.சி.எல்.,) முதல் சீசன் (ஜன. 25 - பிப். 7) நடக்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
* ஜகார்தாவில், இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் லக்சயா சென், பிரனாய், ஸ்ரீகாந்த், தருண், ஆயுஷ் ஷெட்டி, சிந்து, தன்வி சர்மா, உன்னதி ஹூடா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
* 'கேலோ இந்தியா' குளிர்கால விளையாட்டு, லடாக்கின் லே பகுதியில் இன்று துவங்குகிறது.
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்