ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: காஷ்மீரில் வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று (ஜனவரி 22) ராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்று, 17 வீரர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, கானி டாப் என்ற பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.மற்றவர்கள் காயமடைந்தனர்.
விபத்து நடந்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் ராணுவம், காஷ்மீர் போலீசார், உள்ளூர் பொதுமக்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
நம்நாட்டில் மனித உயிருக்கு மதிப்பில்லை
ஓம் சாந்தி
அந்த வாகனத்தை ஆய்வு செய்தால் தெரியும்
இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்மேலும்
-
லஞ்சம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ மிரட்டல்: ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் திடுக்கிடும் புகார்
-
ஆந்திராவில் சமூக வலைதளங்களை பயன்படுத்த சிறார்களுக்கு கட்டுப்பாடு: மாநில அரசு பரிசீலனை
-
ஜார்க்கண்ட் என்கவுன்டரில் மாவோயிஸ்டுக்கள் 8 பேர் சுட்டுக்கொலை
-
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க தடைக்கற்கள்; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
காசியில் திருமணம் முடித்த ரஷ்ய காதலர்கள்.
-
திமுகவை மக்கள் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள்; நயினார் நாகேந்திரன்