ஜார்க்கண்ட் என்கவுன்டரில் மாவோயிஸ்டுக்கள் 15 பேர் சுட்டுக்கொலை

2

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புபடையின் என்கவுன்டரில் மாவோயிஸ்டுக்கள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாரண்டா வனப்பகுதியில் சில மாவோயிஸ்ட்டுக்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

கோப்ரா கமாண்டோக்கள், ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர். சுற்றுவட்டார பகுதி முழுவதும்

தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 மாவோயிஸ்டுக்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:
இந்த என்கவுன்டர் கிரிபுரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கும்டி பகுதியில் நடைபெற்றது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய மாவோயிஸ்ட் தலைவன் பதிராம் மாஜி என்பது தெரியவந்தது.
பாதுகாப்புப் படையினர்,அப்பகுதியை முழுமையாகக் கைப்பற்றவும், தேடுதல் பணிகளுக்காகவும் அடர்ந்த வனப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டை முடிந்தது.மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏராளமான நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவ்வாறு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.

Advertisement