தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க தடைக்கற்கள்; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களை மத்திய பாஜ அரசு தொடர்ந்து போட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: 'செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை' என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, ஹிந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திட பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது. மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திமுக. அதிகார மனப்பான்மையுடன் மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, ஹிந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழகத்தை வஞ்சிக்கிறது.
தமிழ்மொழியின் மீது ஹிந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் மத்திய பாஜ அரசு தொடர்ந்து போட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம்.
தமிழகத்துக்கு மத்திய பாஜ அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும்
திமுகவிற்கே உண்டு. எதிர்க்கட்சியான அதிமுகவும் அதிலிருந்து உதிர்ந்த இலை - தழை - சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டில்லிக்கு ஓடி பாஜவின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன.
மத்திய பாஜ அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் திமுகவினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம். துணிந்து நிற்போம். இனம் - மொழி - நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம்.
தமிழகத்தை தலைகுனிய விடாமல், அனைத்து இலக்குகளிலும் மாநிலத்தை முன்னேற்றி வருகிற திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தொகுதிகள் தோறும் முழங்குகின்ற பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' எனத் தொகுதிகள் தோறும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் பிப்ரவரி 28ம் தேதி வரை நடைபெறவுள்ளன. அத்துடன், ஜனவரி 26ம் தேதி டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் மாநாடு எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 7ம் நாள் விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் திமுக இளைஞர்கள் அணிவகுக்க ஆயத்தமாகிவிட்டனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமழகத்தை தலை குனிய வைத்த இந்த திராவிட சாராய/கஞ்சா மாடல் தான் தமிழத்தின் முதல் எதிரி. இந்த கொள்ளை கூட்டத்தை அடித்து விரட்டினால் மட்டுமே இனி தமிழகம் முன்னேற்றம் காண முடியும்.
கூட்டு கொள்ளயில் தடை கற்களோ.
முதல் தடை கல்லே நீ தான்.
அதுசரி தாடிகாரர் வளத்த பொண்ண கல்யாணம் செஞ்சார் திமுக பிறந்தது என தொர சொன்னது பொய்யா கோப்பால்
பாரதிதாசன் யார்? திமுக தான் மொழி வெறியில் உள்ளது. தமிழக மாநிலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோர் அதிகம். தமிழ் மாநில இணைப்பு மொழி என்று ஏற்று கொண்டனர். அவர்கள் தமிழை எதிர்த்தால்? ஹிந்தி தேசிய இணைப்பு மொழி காங்கிரஸ் கையாண்ட விதம் தான் அண்ணா நெருப்பு ஊற்றி வளர்க்க உதவியது. முஸ்லீம் ஆண்ட போது சுமார் 6 சதம் இசுலாமியர் இருக்குமா? காங்கிரஸ், பிஜேபி ஆளும் போது சுமார் 30 சதம் மேல் இருக்குமா? மத வாதம் என்றால் குறைந்து இருக்க வேண்டும் அல்லவா . இஸ்லாம் நாடக மத சார்பற்ற இந்தியா மாறி வருகிறது என்று கூறலாம்? மத்திய அரசு, மாநிலத்தில் விசாரணை அமைப்புகளை நீக்கி விடலாமா? அவைகள் வழக்கை எதிர் கொள்ள முடியவில்லை. பணம் கொடுத்து பணி முடிக்க ஊழல் துறையை ஏற்படுத்தி விடலாம். நிதிக்கு பஞ்சம் இருக்காது.
அந்த தடை கல்லின் பெயர் சுடாலின் என்கின்றனர் மக்கள்
தமிழக வளர்ச்சியை தடுக்கும் தடை கற்கள் இதோ ஆட்சி செய்த நாலே முக்கால் வருடத்தில் நாலே முக்கால் லட்சம் கோடி ரூபாய் கடன் அதற்கான வட்டி. ஓட்டு வாங்குவதற்காக பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் இலவச பஸ் பயணம் ஊரெங்கும் சிலை மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் அரசு விளம்பரங்கள் வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய வக்கீல்களுக்கு கொடுக்கும் கோடி கணக்கான ரூபாய்கள் விவசாயிகளின் கடும் உழைப்பில் உருவான நெல்மணிகள் சேமிப்புக் கிடங்கு இல்லாமல் முளைத்துப் போனது கள்ளச்சாராயம் சாவு டாஸ்மாக்கினால் சீரழிந்த குடும்பங்கள் இளம் விதவைகள் அதிகமானது கஞ்சா கூல் லிப் போதையினால்மாணவ சமுதாயம் சீரழிந்தது இன்னும் எவ்வளவோ இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடை கற்கள்.
பத்து ஆண்டுகளாக பாஜக மத்திய அரசு பதவிகளில் இருந்துகொண்டு பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு பல தடை கற்களை ஏற்படுத்திக்கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஸ்டாலின்.
முகஸ் கற்கும் மூளை கிடையாது. அவிங்களுக்கு முட்டு குடுக்குறவனுக்கும் மூளை கிடையாதுங்குறது பிரசித்தம். உங்க மூஞ்சியை கண்ணாடில பாருங்கடா..
எங்கள் குலத்தொழில் கொள்ளையடித்தல். அதை செய்ய உரிமை வேண்டும். அதை மத்திய அரசு தடுக்கக் கூடாது.
CM is right and but unaware of those impediments , they are kanja, law & order, rapes, idiotic ministers, corruption.மேலும்
-
கவர்னர் உரையாற்றும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதே தீர்வு: முதல்வர் ஸ்டாலின்
-
வேலை உறுதி திட்டத்தில் மாற்றத்தை எதிர்த்து பார்லி.,யில் குரல் எழுப்புவோம்: கார்கே
-
குரோஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நாசவேலை; வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம்
-
போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை ஏவுவது ஏன்: திமுக அரசு மீது நயினார் கேள்வி
-
அமைதி வாரியத்தில் சேர அனைத்து நாடுகளுக்கும் விருப்பம்: சொல்கிறார் டிரம்ப்
-
லஞ்சம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ மிரட்டல்: ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் திடுக்கிடும் புகார்