கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச உற்சவம்

சேலம்: சின்ன சேலம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று அக்னி பிரவேச உற்சவமும், 192 ரிஷி கோத்ர பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியையொட்டி காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரை அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், 192 ரிஷி கோத்திர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், தன்வந்திரி ேஹாமம் ஆகியவற்றை, நிர்வாக தலைவர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.இதையடுத்து, 192 ரிஷி பூஜை துவங்கும் முன், மகாலட்சும் பூஜையை மகளிர் செய்து வைத்தனர். பின்னர், கன்னிகா பரமேஸ்-வரி அம்மன் அக்னி பிரவேசத்தை முன்னிட்டு, 102 பகோத்திரக்-காரர்கள் ஒப்படை தேங்காய் உடன் அக்னியில் இறங்கினர். சுவா-மியை சுற்றி, கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபி ேஷகம், பல வண்ண பூக்கள் அலங்காரமும் நடைபெற்றது, இதில் சமூக மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement