மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் மோடி விளாசல்: தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என தாக்கு

12

மதுராந்தகம்: ''தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக. கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில், ஓட்டு வங்கி அரசியலுக்காக, நீதிமன்றத்தை கூட விட்டு வைக்காமல் அவமானப்படுத்தினர்,'' என்று மதுராந்தகத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, சரமாரியாக விளாசினார்.

தேஜ கூட்டணியின் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து, மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:முத்ரா திட்டத்தால் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு தான் அதிக ஆதாயம் கிடைத்து இருக்கிறது. 6 லட்சம் கோடி ரூபாய் முத்ரா திட்டம், 3 லட்சம் கோடி ரூபாய் சிறு தொழில்முனைவோருக்கு கிடைத்து இருக்கிறது.இன்று இந்தியா உலக முதலீட்டாளர்களின் விருப்பமாக மாறி இருக்கிறது. இந்த கால கட்டத்தில் தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு மிகவும் அவசியமாகும். மத்திய அரசுடன் இணைந்து பயணிக்கும் அரசு எப்போது ஏற்படுமோ அப்போது தான் முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய சுலபமாக இருக்கும்.

மோடியின் உத்தரவாதம்



தமிழகத்தில் குற்றங்களும், பெரும் குற்றவாளி கும்பல்களும் நடத்தும் ஆட்சியால் மோசமான பாதிப்பு நமது பெண்களுக்கு தான் ஏற்படுகிறது. குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஜெயலலிதா சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் இன்றோ பெண்கள் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். இங்கு தேஜ கூட்டணி அரசை உருவாக்கி தாருங்கள், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
என்டிஏ மத்திய அரசை பொறுத்தவரை பெண்களின் நல்வசதி மற்றும் நலவாழ்வு முதன்மையாக இருந்து வந்திருக்கிறது. 60 லட்சத்துக்கும் அதிகமான கழிப்பறைகள், 1 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி கிடைக்கச் செய்து இருக்கிறோம்.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏழை தாய்மார்களுக்கு பெரும் வசதி கிடைத்து இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்கச் செய்வோம். இது மோடி அளிக்கும் உத்தரவாதம் .
தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் வரலாற்று பங்களிப்பு எப்போதும் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருக்குறளை பல நாடுகளின் தலைவர்களுக்கு பரிசாக அளித்து இருக்கிறோம்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் பிரத்யேக இருக்கை அமைத்து இருக்கிறோம்.
நாங்கள் தமிழ் கலாசாரம் பற்றி வாய்ப்பந்தல் போடுவர்கள்அல்ல. அதை பாதுகாக்க பணியாற்றி வருகிறோம்.

அவமானம்



நமது முருகப்பெருமானுக்கு விளக்கு போடுவது விவாதப் பொருளாக்கப்பட்ட போது, அப்போது நம் தலைவர்கள் எல்லாம் பக்தர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்கள்.
திமுகவும், அவர்களின் கூட்டாளிகளும் வாக்கு வங்கியை குஷிப்படுத்தினர்; நீதிமன்றத்தைக்கூட விட்டு வைக்கவில்லை. அவர்களையும் அவமானப்படுத்தினார்கள். தமிழகத்தின், தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக.
காங்கிரஸ் மற்றும் திமுககாரர்கள் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உங்கள் அனைவரையும் அவமானப்படுத்தினார்கள்.
ஆனால் என்டிஏ அரசோ ஜல்லிக்கட்டுக்கு சட்ட ரீதியான வழிகளை ஆராய்ந்து மீட்டுக்கொடுத்தார்கள், கவுரவப்படுத்தினார்கள்.
தமிழக மக்கள் தங்கள் பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக என்டிஏ அரசாங்கம் துணை நிற்கும்.
தமிழகத்தில் திறமைகளுக்கு குறை இல்லை. இப்போது எப்படிப்பட்ட அரசு தேவை என்றால் இங்கே இருக்கும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
அந்த அரசாங்கம் மத்திய அரசோடு இணைந்து கரம் கோர்த்து பயணிக்க வேண்டும். அதன் மூலம் நம் பாரதத்தை வளர்ச்சி அடைந்ததாக மாற்றுவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement