தாயார் படத்தை வைத்திருந்த சிறுமியை மேடையிலேயே உணர்ச்சி பொங்க பாராட்டிய பிரதமர் மோடி!
மதுராந்தகம்: தேஜ கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தனது தாயார் படத்தை வைத்திருந்தபடி காத்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார்.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று (ஜன.23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். தமிழகத்தில் திமுகவையும், திமுக அரசையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அவரின் ஆவேசமான பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் ஆரவாரத்துடன் கைகளை தட்டியவாறு வரவேற்றுக் கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் சிறுமி ஒருவர் பிரதமர் மோடியின் தாயார் உருவப்படத்தை கைகளில் ஏந்தியபடி அனைவருக்கும் காட்டிக் கொண்டு இருந்தனர்.
நான் என் உரையை மேலும் தொடர்வதற்கு முன்பாக, நெடுநேரமாக அங்கே (கூட்டத்தை பார்த்து கைகாட்டுகிறார்) ஒரு சிறுமி என் தாயாரின் படம் என்று நினைக்கிறேன். அதை கையிலே ஏந்திக் கொண்டு எனக்கு தரவேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்.
மகளே..! உன்னுடைய பெயர் அதில் இருந்தால் போதும். இதை நான் பெற்றுக் கொண்டு உனக்கு எனது நல்லாசி கடித்தை கண்டிப்பாக அனுப்புகின்றேன். என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் அதை பெற்றுக் கொண்டு எனக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி மகளே!
இவ்வாறு பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இதைக் கண்ட கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.
வாசகர் கருத்து (4)
Thirumal s S - Gulbarga,இந்தியா
23 ஜன,2026 - 21:25 Report Abuse
ஓட்டு எல்லாம் வரும் மோதிக்கு 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
23 ஜன,2026 - 20:45 Report Abuse
பெயரையும், முகவரியையும் அதில் எழுதித் தரும்படி கேட்டார் ..... மொழிபெயர்த்தவர் பெயரை மட்டும் என்று குறிப்பிட்டார் .... 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23 ஜன,2026 - 20:37 Report Abuse
மோடி போன்ற சிறந்த தலைவர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. அவர் பல்லாண்டு வாழ்க. 0
0
Reply
S SRINIVASAN - ,
23 ஜன,2026 - 20:19 Report Abuse
நன்றி பிரதமர் ஐயா. 0
0
Reply
மேலும்
-
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே ஆட்சி நடத்தும் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
'போக்சோ'வில் கைதானவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
-
நிதி பெற்று தருவதாக மோசடி; லக்னோ வாலிபர் கைது
-
கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை: திருச்செந்துாரில் பக்தர்கள் அதிர்ச்சி
Advertisement
Advertisement