தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையேறிய தலைவர்கள்! இதோ முழு பட்டியல்

19

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பிரதமர் மோடியுடன் மேடை ஏறினர்.

மேடையில் இருந்த தலைவர்கள் யார்? யார்? என்ற விவரம் இதோ;

• பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடியின் வலதுபுறம் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்

Tamil News
Tamil News
• அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் (நயினார் நாகேந்திரன் அருகில் உட்கார்ந்து இருந்தார்)

•பாமக தலைவர் அன்புமணி

•தமாகா தலைவர் ஜி.கே. வாசன்

•தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான் பாண்டியன்

•புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

• பார்வார்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி

• புரட்சி பாரதம் கட்சித்தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி

ஆகியோர் பிரதமர் மோடியுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

இவர்களுடன், அதே மேடையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அமர்ந்திருந்தார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியின் இடதுபுறம் அமர்ந்திருந்தார். இதே போல மத்திய அமைச்சர் எல். முருகன், டிடிவி தினகரன் அருகிலும், அன்புமணி அருகில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையும் அமர்ந்திருந்தனர்.

இவர்கள் தவிர, மேடையின் முதல் வரிசையில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.

பொதுக்கூட்டத்திற்கான இந்த மேடைக்காக பின்புறம் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட பேனரில் பாமக அன்புமணியின் மாம்பழம் சின்னமும், அமமுகவின் குக்கர் சின்னமும் பெரிதாக அச்சிடப்பட்டு இருந்தது.

Advertisement