சாம்பல் டிரான்ஸ்போர்ட் கூட்டமைப்பு கூட்டம் நடத்த ஆர்.டி.ஓ.,விடம் மனு
மேட்டூர்: நிலக்கரி சாம்பல் லாரிகளுக்கு, வாடகை உயர்த்தி வழங்க முத்த-ரப்பு கூட்டம் நடத்தக்கோரி மேட்டூர் ஆர்.டி.ஓ.,விடம் ஒருங்கி-ணைந்த சாம்பல் டிரான்ஸ்போர்ட் தொழில் கூட்டமைப்பு நிர்வா-கிகள் மனு கொடுத்தனர்.
மேட்டூர் அனல்மின் நிலையங்களில், நிலக்கரி எரித்த பின்பு வெளியேற்றும் சாம்பல் சிமென்ட் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த, 2012ல் ஆர்.டி.ஓ., தலை-மையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில், சாம்பல் லாரிகள் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்பு, 13 ஆண்டுகள் ஆன நிலையில் லாரிகளின் உதிரிபாகங்கள் கொள்முதல், டீசல் விலை, டிரைவர் சம்பளம் பல மடங்கு உயர்ந்து விட்டது.அதற்கேற்ப லாரிகளின் வாடகையை சிமென்ட் ஆலைகள் உயர்த்தவில்லை. சாம்பல் லாரிகளின் வாடகையை சிமென்ட் ஆலைகள் உயர்த்தி வழங்ககோரி, ஆர்.டி.ஓ., தலைமையில் அனல்மின் நிலைய தலைமை பொறியாளர்கள், சிமென்ட் ஆலை நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்-டத்தை நடத்த வேண்டும்.
அதில், லாரி வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என, நேற்று ஒருங்கிணைந்த சாம்பல் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் கூட்ட-மைப்பு தலைவர் முருகன் வெங்கடாசலம், துணைத் தலைவர் குமார், பொருளாளர் பெஸ்கி மற்றும் நிர்வாகிகள் மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.
மேலும்
-
தாயார் படத்தை வைத்திருந்த சிறுமியை மேடையிலேயே உணர்ச்சி பொங்க பாராட்டிய பிரதமர் மோடி!
-
2வது டி - 20 கிரிக்கெட்: இந்தியா பவுலிங்
-
டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழகத்தில் ஓடாது!: முதல்வர் ஸ்டாலின்
-
தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மேடையேறிய தலைவர்கள்! இதோ முழு பட்டியல்
-
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் மோடி விளாசல்: தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக என தாக்கு
-
சுதந்திரச் சுடர்: மாவீரன் நேதாஜி