புனிதமான சட்டசபையில் ஸ்டாலின் பொய் சொல்கிறார்

1

@quote@ சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனால் தான் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் எனக்கு இனிப்பு ஊட்டி நன்றி தெரிவித்தனர்' என கூறியிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகளில் ஒன்றே ஒன்று மட்டும் தான் நிறைவேற்றப்பட்ட நிலையில், 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, முதல்வரே சட்டசபையில் பொய் சொல்வது கண்டிக்கத்தக்கது.
சட்டசபை என்பது மிகவும் புனிதமான இடம். அங்கு, உண்மைகளை மட்டுமே பேச வேண்டும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் உள் இட ஒதுக்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள் என அனைத்திலும் முதல்வரும், அமைச்சர்களும் சட்டசபையில் பொய்யை மட்டுமே கூறுகின்றனர். இதற்கு, வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,quote

Advertisement