கரப்ஷன், மாபியா, கிரைம் மிகுந்த திமுக ஆட்சி; பிரதமர் மோடி காட்டம்

32

மதுராந்தகம்: '' திமுக அரசை 'சிஎம்சி(CMC)' அரசு என மக்கள் அழைக்கின்றனர். சிஎம்சி என்றால் ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசு,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை துவக்கி வைத்து மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழக மக்களின் நாட்டுப்பற்று



எனது அருமை சகோதர சகோதரிகளே வணக்கம். 2026 ம் ஆண்டில் தமிழகத்துக்கு எனது முதல் பயணம் இது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு மகிழ்ச்சி நிறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் வளர்ச்சி மனிதர் எம்ஜிஆர் பிறந்த நாளை நாம் கொண்டாடினோம். இன்று இந்த மேடையில் இருந்து ஏரிகாத்த நாராயணனுக்கு தலைவணங்குகிறேன். அனைவரின் நலன், தமிழகத்தின் நலனுக்காக வேண்டிக் கொள்கிறேன்.

இன்று நேதாஜியின் பிறந்த நாள். இந்த நாளை பராக்கிராம நாள் என்று தேசம் கொண்டாடுகிறது. தமிழகத்தில் பல சுதந்திர போராட்ட தியாகிகள், நேதாஜி உடன் இணைந்து சுதந்திர போரில் ஈடுபட்டனர். வீரம் மற்றும் நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி நரம்பில் ஓடுகிறது. இந்த மண்ணில் இருந்து நேதாஜிக்கு வீரவணக்கத்தை காணிக்கையாக்குகின்றேன்.

கவுண்ட் டவுன்



இங்கே மக்கள் அலைகடல் என திரண்டுள்ளது. இது ஒட்டு மொத்த தமிழகத்துக்கும், தேசத்துக்கும் ஒரு செய்தியை அனுப்புகிறது. அது என்னவென்றால், தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது.

திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழகம் துடிக்கிறது. பாஜவின் தேஜ கூட்டணி ஆட்சியை விரும்புகிறது. தேஜ கூட்டணி தலைவர்கள், தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பார்கள். ஒரே முடிவோடு, ஒரே நிலைப்பாட்டோடு இணைந்துள்ளனர். தமிழகத்தை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு.


@quote@தமிழகத்தை வளர்ச்சியடைந்த பாதுகாப்பான, ஊழல் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இதனை என்னால் தெளிவாக காண முடிகிறது. திமுக அரசின் கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. quote

பூஜ்ஜியம்



ஆட்சி செய்ய திமுகவுக்கு வாய்ப்பு அளித்தீர்கள். அதிகாரத்தை அளித்தீர்கள். ஆனால், நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித்தெளித்தாலும் திமுக ஆற்றிய பணிகள் பூஜ்ஜியம்.

திமுக அரசை 'சிஎம்சி' அரசு என அழைக்கின்றனர். சிஎம்சி என்றால் கரப்சன், மாபியா, கிரைம் என்று அர்த்தம். ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றை ஆதரிக்கும் அரசு.


தமிழக மக்கள் திமுக மற்றும் சிஎம்சி இரண்டையும் கிள்ளி எறிய வேண்டும் என தீர்மானம் செய்துவிட்டனர். தமிழகத்தில் தேஜவின் இரட்டை இன்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது.

ஊழல் மலிவு



தமிழகத்தில் ஜனநாயகம், நம்பகத்தன்மை இல்லை. திமுக அரசு,ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டும் இயங்கி கொண்டு உள்ளது. திமுகவில் நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்,நீங்கள் அவர்களுக்கு ஆமாம் சாமி போட வேண்டும்.



@quote@ பெண்களை, கலாசாரத்தை வசைபாடும் அரசாக திமுக உள்ளது. இதன் பாதிப்பை தமிழகம் சந்திக்கிறது. எத்தனை ஊழல் மலிந்துள்ளது. அந்த பணம் யார் பைகளுக்கு செல்கிறது என சிறு குழந்தை கூட தெரிந்துவைத்துள்ளது. quote

7 மடங்கு அதிகம்



தமிழகம் எப்படிப்பட்ட பூமி என்றால், பாரதத்தின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக ஆக்கியது. சங்ககால இலக்கியம், கோவில், விஞ்ஞானம் இலக்கியம் ஆகியவை பாரதத்தை உயர்த்தியது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறும் நிலையில், தமிழகத்தை திமுக என்ற களையில் இருந்து அகற்ற வேண்டும். தமிழகம் எவ்வளவு வேகமாக முன்னேறுகிறதோ அந்தளவு நாடும் முன்னேற்றம் அடையும்.



@block_Y@கடந்த 11 ஆண்டுகளில் தேஜ அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்கு வரலாறு காணாத பணிகளை ஆற்றி உள்ளது. 2014 க்கு முன்பு டில்லியில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு. தமிழகத்தின் வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் தேஜ கூட்டணி அரசு அதிகாரப்பகிர்வு வாயிலாக கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயை அளித்துள்ளது. காங்கிரஸ் திமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமானது. block_Y

கடந்த 11 ஆண்டுகளில் தமிழக மக்களின் நல்வாழ்விற்காக மத்திய அரசு 11 லட்சம் கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது. ஆனால், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவி வழங்குகிறோம் என்ற பெயரில் மோசடிகள் மட்டும் தான் அரங்கேறின.



@block_B@திமுக கூட்டணி அரசு ரயில் பட்ஜெட் என்ற வகையில் தமிழகத்துக்கு அளித்த தொகையை விட தேஜ கூட்டணி அரசு 7 மடங்கு அதிக நிதியை அளித்துள்ளது. தமிழகத்தில் 80 ரயில்நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் போன்ற அதிவேகமாக செல்லும் ரயில்களை தேஜ கூட்டணி அரசு தான் இயக்கி இருக்கிறது. block_B

விவசாயிகளுக்குநிதி



தமிழகத்தின் மிகப்பெரிய பலம் என்றால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தான். தேஜ கூட்டணி அரசின் கொள்கைகளால் விவசாயத்தில் சாதனை படைக்கும் அளவுக்கு உற்பத்தி நடக்கிறது.

மீனவர்கள் மற்றும்விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளே காரணம். முன்னர் குறைவான விவசாயிகள் மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. தேஜ கூட்டணி அரசு வங்கி கணக்குகளை சேர்ந்து கொடுத்தது. அத்துடன் விவசாயிகள் நிதியுதவி துவக்கப்பட்டது. இதுவரை 4 லட்சம்கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைத்து இருக்கிறது.

தேஜ கூட்டணி அரசு மீன்வள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. தேஜ அரசு சிறு விவசாயிகள், மீனவர்கள் கூட்டுறவோடு இணைத்து வருகிறது. தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் துறையில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. விவசாயிகள், மீனவர்களின் உற்பத்தி பொருட்கள் உலகசந்தையில் கொண்டு சேர்க்க பாஜ அரசு செயல்பட்டு வருகிறது.

போதைப்பொருள் பாதிப்பு



வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்குவதில் நமது இளைஞர்கள், பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், இங்கு இருப்பதோ திமுக அரசு. அவர்களை, போதைப்பொருள், குற்றவாளிகளிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.தங்கள் கண்முன்னரே குழந்தைகள் பாதிக்கப்படுவதை பெற்றோர்கள் பார்க்கின்றனர்.

இளைஞர்களை போதைப்பொருட்களில் இருந்து மீட்க வேண்டும். தேஜ கூட்டணிக்கு அளிக்கும் ஒட்டு போதைப்பொருளுக்கு எதிரானது. திமுக ஆட்சியில் போதைப்பொருள் வியாபாரிகள் சிறப்பாக உள்ளனர். தமிழக மக்களின் நலனில் தேஜ கூட்டணி அக்கறை கொண்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement