வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி; அமித்ஷா
கோல்கட்டா: வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள பாரக்பூரில் நடந்த பாஜ கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் மாநில மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அவசியம். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) அரசு சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது. எல்லைப் பாதுகாப்பை பலவீனப்படுத்தி உள்ளது. ஊழலை வேரூன்றச் செய்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அரசு அழிந்து போவது உறுதி.
மேற்கு வங்கத்தில் ஊடுருவல் நடந்து வருவது அது முழு நாட்டிற்கும் ஒரு பாதுகாப்புப் பிரச்னையாக மாறியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும், ஊடுருவல்காரர்கள் அதன் வாக்கு வங்கி என்பதால், எல்லை வேலி அமைக்க திரிணமுல் காங்கிரஸ் அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு நிலம் வழங்கவில்லை.
சட்டவிரோத குடியேறிகளை மாநில நிர்வாகம் மற்றும் போலீசார் தடுக்கவில்லை, மாறாக போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்
கோல்கட்டா அருகே ஆனந்தபூரில் உள்ள தொழிற்சாலையில் சமீபத்தில் தீ பற்றி எரிந்தது. இது ஒரு விபத்து அல்ல, மம்தா பானர்ஜி அரசின் ஊழல் காரணமாக ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலை உரிமையாளர்கள் ஏன் காவலில் எடுக்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் நிர்வாகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுவா மற்றும் நாமசூத்ரா சமூகங்களை திரிணமுல் காங்கிரஸ் மிரட்டுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பயப்பட ஒன்றுமில்லை. ஊழல் கறைபடிந்த அமைச்சர்களுக்கு சட்டசபை தேர்தல் போட்டியிட மறுப்பதன் மூலம் அதைச் சமாளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மம்தா பானர்ஜி நிரூபிக்க வேண்டும்.
பாஜ 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திரிணமுல் காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி, அதற்கு பதிலாக தேசபக்தர்கள் மற்றும் தேசியவாதிகளின் அரசு அமையும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இதற்கு முன் தமிழக, மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் திருத்தம் வெற்றி கணிக்கும் அளவிற்கு ஆளும் கட்சி மேற்பார்வையில் நடைபெற்றது. தற்போது தேர்தல் ஆணையம் நேரடி மேற்பார்வையில். முன்பு போல் மம்தா, ஸ்டாலின் வெற்றி பெற முடியாது.. அந்நிய குடியேற்றம் கண்டுபிடிக்க இந்தியாவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் சட்ட மன்ற ஓட்டுரிமை தற்காலிகமாக நிறுத்த முடியுமா என்று ஆலோசிக்க வேண்டும். இதன் மூலம் கள்ள குடியேறிகளை நம் நாட்டு முஸ்லிம்கள் அடையாள படுத்தி விடுவர். பாகிஸ்தான் தூண்டுதல் நின்று விடும். ?
இந்த செய்தியை பார்த்தவுடன் இந்த நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது... “உலகத்தை வென்று ஒரு குடையின்கீழ் ஆளவேண்டுமென்ற கனவு கண்ட மாவீரன் நெப்போலியன் ஐரோப்பிய நாடுகளை வென்று கொண்ட வந்து ஆணவத்தின் உச்சத்தில் 1812-ல் ரஷ்யா மீதான படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. இறுதியாக ஜூன் 18, 1815-ல் வாட்டர்லூ போரில் பிரிட்டிஷ் மற்றும் புருசியப் படைகளிடம் தோல்வியடைந்தார். பின்னர், செயிண்ட் ஹெலினா தீவில் சிறைவைக்கப்பட்டு, மே 5, 1821-ல் வயிற்று புற்றுநோயால் மறைந்து போனான்... இது உலக வரலாறு சொல்லும் பாடம்... அதுவும் ஒரு மாவீரனுக்கே இந்த கதி...? இதைத்தான் சந்தானம் காமெடியில் சொல்லணும்னா “ராணுவத்தில் அழிந்தவனைவிட... ஆணவத்தில் அழிந்தவர்கள்தான் அதிகம்”...
2011 லருந்து பல ஊழல்களைச் செய்து திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது, - சாரதா சிட் ஃபண்ட், ஆசிரியர்கள் நியமனம், பொன்சி முறைகேடு, வெல்ல நிவாரண ஊழல் etc. etc. .... உங்களால் என்ன செய்ய முடிந்தது ?
Yes. Well known anti nationalist does every corruption and act against laws, is also ruling the state. But BJP could nothing. Now alone how come?
கூத்தாடிக்கு கூத்தாடிகள் ரோல் மாடல். கச்சிதம். ஜெயித்தால் ஒரே கூத்துதான்
2021 மேற்கு வங்க தேர்தலில் கூட இவர் இப்படித்தான் சொன்னார். ஆனால் தோற்றது என்னவோ இவர் கட்சிதான். சும்மா அடிச்சு விடுவார்.
1 1/2 கோடி கள்ளவோட்டர்கள் - VOTER LIST ல் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர்
இனி TMC முழுவதும் அழிவது உறுதி,
பீகார் தேர்தல் முடிவுக்கு சமமாக TMC 40 சீட்டுக்கு மேல் பெறமுடியாது
பிஜேபி 225 சீட்டு பெற்று ஆட்சி அமைக்கும்.மேலும்
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
-
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
-
மத்திய பட்ஜெட்டில் கேரளா மிஸ்ஸிங்; சசிதரூர் விமர்சனம்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!
-
தர்ஷனாவின் பாட்டும் ஒப்பனையும்...