தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
சென்னை: தி.மு.க., தொகுதி பங்கீடு குழு அமைத்து, எங்களை பேச்சுக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறி உள்ளார்.
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவை, விரைவாக அமைத்து, முதலில் எங்களை அழைத்து தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என, காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தாமதமவதால், சென்னை பேரணி மற்றும் புதுச்சேரி நடைபயணத்தில் பங்கேற்க இருந்த, அக்கட்சி பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முதன்மை பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், சென்னை வருவதாக இருந்தது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், காந்தி பெயரை நீக்கிய, மத்திய அரசை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபயணத்தில் பங்கேற்க இருந்தார். அதன்பின், புதுச்சேரி சென்று, அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடக்கும், நடைபயணத்தில் பங்கேற்கும் வகையில், பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முற்றும் புதுச்சேரி வரும்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்து பேச, வேணுகோபால் திட்டமிட்டிருந்ததாகவும், தகவல் வெளியானது. கடந்த டிசம்பர் மாதம், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் ஷோடங்கர்,முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, காங்கிரஸ் போட்டியிட விரும்பும், தொகுதிகள் பட்டியலை அளித்தார்.
அப்போது, தி.மு.க.,தரப்பில், 'தொகுதி பங்கீடு குழு அமைத்த பின் பேசுவோம்' என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான், தமிழகம் வர இருந்த வேணுகோபால், தி.மு.க., தரப்பை சந்தித்து கூட்டணி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்தவிருந்தார். இது தெரிந்ததும், தி.மு.க., தரப்பில் 'எங்கள் கட்சி சார்பில், கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, இன்னும் குழு அமைக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, வேணுகோபால் தனது தமிழக பயணத்தை ரத்து செய்துள்ளார். ஆனால், இதை வெளியில் சொல்ல விரும்பாத காங்கிரசார், 'மத்திய பட்ஜெட் தாக்கலுக்காக பார்லி,யில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அவரால் தமிழகம் வர முடியவில்லை; அதனால், அவருடைய தமிழக பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது' என கூறுகின்றனர்.
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், சென்னை வந்தார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., தொகுதி பங்கீடு குழு அமைத்து, எங்களை பேச்சுக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் நன்கு வளர்ந்துள்ளதோடு வலுவாக உள்ளதால் தான், தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்ட கட்சிகளும், எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன.
விரைவில் தி.மு.க., சார்பில் குழு அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுக்கு அழைத்ததும், காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் குழு சென்று, அவர்களோடு பேச்சு நடத்தும். பேச்சு, நல்லபடியாக முடியும் என நம்புகிறோம்,'' என்றார்.
காங்கிரசின் வேட்பாளராக கொடிக் கம்பம் அல்லது ஒரு கழுதையை நிறுத்தினால் கூட வெற்றி என ஒரு காலத்தில் கூறுவர். காமராஜர் கூட நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்றார். எப்பூடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.
உப்பு சத்தியாகிரகம் நடத்திய மகாத்மா காந்தி காங்கிரஸ்காரர்களுக்கு உப்பை கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கலாம்
பிச்சைக்காரர்கள் மானங்கெட்ட இத்தாலிய அயோக்கியர்கள்
பிச்சை வாங்கும் நிலையில் இருக்கும் சூழ்நிலையில் இருப்பவர் பொறுமையுடன்தானே காத்திருக்கவேண்டும். அவசரப்பட்டால் எப்படி.
Dear congress why begging???
திமுக அடிமையான செல்வப்பெருந்தகை மூஞ்சியை மட்டும் நல்லா பாருங்களேன் திமுக கூட்டணி என்றவுடன் எவ்வளவு சந்தோஷம். இதே திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி முறிந்து விட்டால் அப்போது அந்த மூஞ்சியை பார்க்க நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.
கேரள முதல்வர் ஆகணும் என்று KC வேணுகோபால் தானே WRONG GUIDANCE கொடுப்பது
புதிதாக தொடங்கிய கட்சி உங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது என்றால்.... தாராளமாக கூட்டணி வைக்க வேண்டியது தானே.... உங்களை யார் தடுத்தது.... அது மட்டுமல்லாமல் கான் கிராஸ் கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்து இருக்கிறது என்றால்.... அடுத்த கட்சியை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறீர்கள்.... பேசாமல் உங்கள் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்க வேண்டியது தானே.... நீங்கள் தான் ஆட்சி அமைக்க போகிறீர்கள்.... உங்கள் கட்சி தான் வளர்ந்து இருக்கிறதே ??மேலும்
-
மாரத்தானில் சாதிக்கும் அரண்மனை நகரத்து பெண்
-
உக்ரைனில் பஸ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி
-
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது; பாதுகாப்பு துறைக்கு முன்னுரிமை குறித்து நிர்மலா சீதாராமன்
-
ஈரானுடன் ஒப்பந்தம்; டிரம்ப் நம்பிக்கை
-
இந்தியாவை இழிவுபடுத்த வேண்டாம் ; ராகுலை எச்சரிக்கும் கிரண் ரிஜிஜூ
-
ஜெயில் டூ பெயில்; பெயில் டூ ஜெயில் தி.மு.க., கூட்டணியை விமர்சித்த சுதாகர்ரெட்டி