இஸ்ரேல் ஊதும் மகுடிக்கு ஆடும் பாம்பு டிரம்ப்; எப்ஸ்டீன் அறிக்கையில் புதுகுண்டு
வாஷிங்டன்: உலக நாடுகளை வரியால் மிரட்டி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, இஸ்ரேல் கட்டுப்படுத்துவதாக எப்ஸ்டீன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019ம் ஆண்டு சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர். அவரது குற்ற செயல்பாடுகள் குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தியது.
இது தொடர்பான ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் இப்போது நீதிமன்ற உத்தரவுப்படி வெளியாகி வருகின்றன. ஆரம்ப காலத்தில் டிரம்பும், எப்ஸ்டீனும் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்து தற்போது வெளியாகி வரும் விசாரணை அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், டிரம்பின் நிறுவனம் மற்றும் முதல் பதவிக்காலத்தின் அரசு நிர்வாகத்தில் அதிக தலையீடு காட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல், மருமகன் குஷ்னரின் குடும்பத்தினருக்கு, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் தொடர்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி மோசடி வழக்குகளில் தண்டனை பெற்ற குஷ்னரின் தந்தைக்கு, அதிபர் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியதையும் கூறியுள்ளது. குஷ்னரின் ரஷ்ய முதலீடு மற்றும் ரஷ்ய அரசு தொடர்புடைய நிறுவனங்களுடன் தொடர்பை வெளிப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அந்த அறிக்கை, பெவர்லி ஹில்ஸ் மாளிகையை டிரம்ப் சுமார் ரூ.375 கோடிக்கு வாங்கி, பின்னர் அதை வெளிநாட்டுத் தொடர்புகள் கொண்ட ஒரு போலி நிறுவனத்திற்கு 870 கோடிக்கு விற்றதையும் குறிப்பிட்டுள்ளது.
இங்கே கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பம் ஊதும் மகுடிக்கு தற்குறி டுமிழர்கள் 8 கோடி பேர் ஆடி தங்கள் பணத்தை ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் கொள்ளை அடிக்க அனுமதிக்கவில்லையா?
இவர் சொல்வது உண்மை, மத்தியகிழக்கில் இஸ்ரேல் தன் ஆதிக்கத்தை இழக்கக்கூடாது என்றுதான் டிரம்ப் இந்தனை நாடகம், அமெரிக்காவுக்காக அல்ல, இஸ்ரேலுக்காக அமெரிக்க மக்கள், பல பயிட்சிகளை சாதனை புரிந்த இராணுவ வீரர்கள் உயிரை டிரம்ப் பகடைக்காயாக வைத்திருக்கிறார், இதே வேறுநாடக இருந்தால் மக்கள் டிரம்ப்பை அடித்து விரட்டி இருப்பார்கள்.
டிரம்பை போன்ற ஒரு நம்பகத்தன்மை இல்லாத மனிதரை பற்றிய, பழைய தகவல். இப்போது அவர் நிலைபாடு வேறு.
Epstein files reveal that Mira Nair attended a 2009 afterparty linked to her film Amelia at Ghislaine Maxwell’s New York residence. NYC Mayor Mamdanis mother is Mira Nair.
100% உண்மெய்மேலும்
-
சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம்; உ.பி. அரசு அதிரடி
-
தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவுக்காக காங்., காத்திருப்பு; முதலில் பேச அழைக்கும் என எதிர்பார்ப்பு
-
மத்திய பட்ஜெட்டில் கேரளா மிஸ்ஸிங்; சசிதரூர் விமர்சனம்
-
நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றமில்லை; அமைச்சர் பியுஷ் கோயல்
-
கம்போடியா... காரைக்கால் அம்மையார்... கமல்... நான்!
-
தர்ஷனாவின் பாட்டும் ஒப்பனையும்...