இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : அடுத்த வாரம் வெளியாகிறது கூட்டறிக்கை!
புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் அளவுக்கு எரிசக்தி,தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பொருட்களை வாங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பதுடன், முதலீடு ஈர்க்கப்பட்டு, அமெரிக்கா உடனான பொருளாதார உறவு வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நாடுகள் பெற்ற ஒப்பந்தத்தை விட, இந்தியா பெற்ற ஒப்பந்தம் சிறந்தது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒப்பந்தம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளில் உள்ளதாகவும், அது குறித்த கூட்டறிக்கை இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனநாயகன் படம் மாதிரி ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்காம். அதுக்குள்ளே எல்லோரும் பெரியவருக்கு 140 கோடி மக்கள்சார்பா மெடல் குத்தி உட்டாச்சு.
ஒப்பந்தம் வெளியான பிறகு அனைத்து உண்மைகளும் வெளியே வந்துவிடும்மேலும்
-
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!