தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 630 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் கடந்த வாரம் உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை, சில தினங்களாக குறைந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 02) ஆபரண தங்கம், 13,950 ரூபாய்க்கும், சவரன், 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 03) காலை தங்கம் விலை, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 14,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,12,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 14,270 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,920 ரூபாய் அதிகரித்து, 1,14,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் அதிகரித்தது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 630 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 7,600 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளியும் அதிகரிப்பு
வெள்ளி விலையும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 320 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (1)
ராஜா, கரூர் - ,
04 பிப்,2026 - 15:50 Report Abuse
அவ்வளவுதான் தங்கம் விலை இனி குறையாது 0
0
Reply
மேலும்
-
சர்வதேச குத்துச்சண்டை: இந்தியா ஆதிக்கம்
-
பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்: திருப்பூரில் 13 பேர் கைது
-
தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்
-
நேபாளம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய மசோதா வாபஸ்; அரசு அறிவிப்பு
-
ஐசிசி., யு-19 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா
Advertisement
Advertisement