துருக்கியில் அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை: பதற்றத்தைத் தணிக்க ஏற்பாடு

2

நமது நிருபர்

டிரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துள்ள பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்த துருக்கி திட்டமிட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஈரான் உடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்த துருக்கி திட்டமிட்டுள்ளது.
இஸ்தான்புல்லில் நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Advertisement