கால்பந்து: தமிழகம் ஏமாற்றம்

சிலபதார்: சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் காலிறுதியில் தமிழக அணி 'பெனால்டி ஷூட் அவுட்டில்' தோல்வியடைந்தது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் நடக்கிறது. நேற்று காலிறுதி போட்டிகள் அசாமின் சிலபதார் நகரில் நடந்தன. தமிழக அணி, பஞ்சாப்பை எதிர்கொண்டது. இப்போட்டி 1-1 என சமனில் முடிந்தது, வெற்றியாளரை முடிவு செய்ய கூடுதல் நேரம் (30 நிமிடம்) நடந்தது. மீண்டும் சமநிலை தொடர, 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இதில் தமிழக அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
மற்றொரு காலிறுதியில் ரயில்வேஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை வென்றது. கேரளா அணி, 3-0 என அசாம் அணியை வீழ்த்தியது.
சர்வீசஸ் அணி 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில், நடப்பு சாம்பியன் மேற்கு வங்கத்தை 3-2 என வென்றது. கேரளா, பஞ்சாப், சர்வீசஸ், ரயில்வேஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

Advertisement