நேற்று வரை கெட்டவர்; இன்று 'ஜிகிரி தோஸ்த்' கொலம்பியா அதிபருக்கு டிரம்ப் விருந்து
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்துவதாகவும், நோயுற்ற மனிதர் என்றும் கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோவை விமர்சித்திருந்த சில வாரங்களிலேயே, அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து வைக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
பொருளாதார தடை
தென் அமெரிக்க நாடான கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே கடுமையான வர்த்தை போர் சமீப காலமாக நிலவி வந்தது.
கடந்த 2025 செப்டம்பரில் அமெரிக்க வீரர்களை, தனக்கு எதிராக கலகம் செய்ய துாண்டியதாக கூறி, பெட்ரோ மற்றும் அவரது குடும்பத்தினரின் அமெரிக்க விசாவை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ததுடன், பொருளாதார தடையும் விதித்தது.
அமெரிக்காவுக்குள் கோகைன் எனும் போதைப் பொருளை விற்க விரும்புபவர் என்றும், நோயுற்ற மனிதர் என்று பெட்ரோவை கடுமையாக சாடியிருந்தார் டிரம்ப்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் பிடித்து சிறையில் அடைத்ததை 'கடத்தல்' என பெட்ரோ விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடியாக, 'அடுத்தது நீங்கள் தான்' என்று பெட்ரோவை எச்சரித்திருந்தார் டிரம்ப்.
இவ்வளவு கசப்பான சம்பவங்களுக்குப் பின், சமீபத்தில் இருவரும் ஒரு மணி நேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டனர்.
விருந்து இதை த் தொடர்ந்து, இருவரும் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டு, இருவரும் இன்று வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளனர். பெட்ரோவுக்கு, டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளிக்க உள்ளார்.
இச்சந்திப்பு குறித்து டிரம்ப் கூறுகையில், “பெட்ரோ மிகவும் நல்ல மனித ராக மாறி விட்டார். போதைப் பொருள் கடத்தலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறார்,” என தெரிவித் துள்ளார்.
பள்ளி பசங்கபோல ஒருநாள் சண்டை, மறுநாள் நண்பன், இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல.