உலோக துறை நிறுவன பங்குகள் விலை உயர வாய்ப்பு இருக்கிறதா?

இந்தியா- - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில், அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான 50 சதவீத வரி குறைக்கப்படாவிட்டாலும், அவற்றை பயன்படுத்தும் பிற துறைகளுக்கு கிடைக்கும் சலுகைகளால், அவற்றின் தேவை அதிகரிக்கும்.
இதனால் 'உலோக துறைக்கு மறைமுக பலன் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது' என, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணை தலைவர் விகாஷ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளியின் விலை குறித்த மதிப்பீடு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. முன், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 154 ரூபாயில் இருந்து, தற்போது 260 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்திய பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சில உலோக நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உயர்வு தொடர்கிறது. அடுத்த சில மாதங்களில், குறிப்பிட்ட உலோகங்களுக்கான தேவை உச்சம் தொடும் என்பதால், அவை தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளுக்கு ஆதரவு கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement