எமிரேட்சை சாய்த்தது நேபாளம் * 'டி-20' உலக கோப்பை பயிற்சியில்...
சென்னை: 'டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் நேபாளம், ஜிம்பாப்வே, ஓமன் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியா, இலங்கையில், ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை (பிப். 7 - மார்ச் 8) 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள், நான்கு பிரிவுகளாக களமிறங்க உள்ளன. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடக்கின்றன. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாள அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நேபாளம் பீல்டிங் தேர்வு செய்தது.
எமிரேட்ஸ் அணிக்கு ஆர்யான்ஷ் (25), கேப்டன் முகமது வசீம் (6) ஜோடி துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த ஜோகைப் 19, அலிஷான் 12 ரன் எடுத்தனர். பின் வரிசையில் ஹர்ஷித் கவுஷிக் (35), சோகைப் கான் ஜோடி, சற்று நம்பிக்கை தந்தது. எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 145/6 ரன் எடுத்தது. சோகைப் (28) அவுட்டாகாமல் இருந்தார்.
நேபாள அணிக்கு குஷால் (8), ஆசிப் (8) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. கேப்டன் ரோகித் பவுடல், 16 ரன் எடுத்தார். பின் இணைந்த திபேந்திர சிங், ஆரிப் ஷேக் ஜோடி பவுண்டரி மழை பொழிந்தது. இவரும் அரைசதம் விளாசினர். நேபாள அணி 17 ஓவரில் 148/3 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திபேந்திர சிங் (50 ரன், 31 பந்து), ஆரிப் (61 ரன், 37 பந்தில்) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜிம்பாப்வே அபாரம்
கொழும்புவில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தியான் (32), மருமானி (28), கேப்டன் சிக்கந்தர் ராஜா (20) உதவினர். 20 ஓவரில் ஜிம்பாப்வே அணி, 178/9 ரன் எடுத்தது. ரியான் பர்ல் (50) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி, துவக்கத்தில் இருந்து தடுமாறியது. லெவிட் (20), கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் (26), ஆர்யன் தத் (18) ஆறுதல் தந்தனர். 20 ஓவரில் 149 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வான் பீக் (40) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி 29 ரன்னில் வெற்றி பெற்றது. ரிச்சர்டு 3 விக்கெட் சாய்த்தார்.
* கொழும்பில் நடந்த மற்றொரு போட்டியில் ஓமன், இலங்கை 'ஏ' அணிகள் மோதின. முதலில் விளையாடிய இலங்கை 'ஏ' அணி, 20 ஓவரில் 145/9 ரன் எடுத்தது. ஓமன் அணியின் ஆமிர் கலீம் (80) கைகொடுக்க, 18 ஓவரில் 146/5 ரன் எடுத்து, 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
டிக்கெட் விற்பனை
'டி-20' உலக கோப்பை தொடரின் விற்பனை கடந்த 2025, டிச. 11, 2026, ஜன. 14 என இரு கட்டமாக நடந்தது. இதன் மூன்றாவது கட்ட பிப். 6ல் துவங்குகிறது.
மேலும்
-
நேற்று வரை கெட்டவர்; இன்று 'ஜிகிரி தோஸ்த்' கொலம்பியா அதிபருக்கு டிரம்ப் விருந்து
-
'ஏர் இந்தியா' விமானத்தில் மீண்டும் கோளாறு; 'போயிங் 787' ரக விமானங்களில் சோதனை
-
நீங்க என்ன நினைக்கிறீங்க?
-
விலை நிலவரம்: தங்கம், வெள்ளி
-
உலோக துறை நிறுவன பங்குகள் விலை உயர வாய்ப்பு இருக்கிறதா?
-
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு; முதல்வரை குற்றஞ்சாட்டி காங்., அமளி