'ஸ்டீல் இறக்குமதிக்கு வரி குறையாவிட்டாலும் தேவை உயர வாய்ப்பு'
இ ந்தியா- - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில், அலுமினியம் மற்றும் ஸ்டீல் மீதான 50 சதவீத வரி குறைக்கப்படாவிட்டாலும், அவற்றை பயன்படுத்தும் பிற துறைகளுக்கு கிடைக்கும் சலுகைகளால், அவற்றின் தேவை அதிகரிக்கும்.
இதனால் 'உலோக துறைக்கு மறைமுக பலன் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது' என, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணை தலைவர் விகாஷ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளியின் விலை குறித்த மதிப்பீடு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. முன், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 154 ரூபாயில் இருந்து, தற்போது 260 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்திய பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சில உலோக நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உயர்வு தொடர்கிறது. அடுத்த சில மாதங்களில், குறிப்பிட்ட உலோகங்களுக்கான தேவை உச்சம் தொடும் என்பதால், அவை தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளுக்கு ஆதரவு கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும்
-
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்