'தினமலர்' செவ்வாய் கிரகத்திலும் வெளியாகும்
எனக்கும் தினமலருக்குமான உறவு, மாணவனுக்கும் ஆசிரியருக்குமானது. அரை நுாற்றாண்டை கடந்து இன்றும் தொடர்கிறது. அன்று மாணவனாக இருந்த எனக்கு வழிகாட்டியாக திகழ்ந்து, தேர்வுக்கும், அதைதொடர்ந்து கல்லுாரி படிப்பிற்கும் ஆற்றுப்படுத்தும் அறப்பணியை செய்தது 'தினமலர்'. என்னை, மருத்துவராகவும் கல்வியாளராகவும், ஏணிப்படியாக இருந்து உயரச் செய்திருக்கிறது தினமலர்.
ஒரு மருத்துவராகிய என் பார்வையில், தமிழ் மக்களின் நாடித்துடிப்பு தினமலர். தினமலரில் வெளிவரும் மருத்துவம் சார்ந்த விளக்கங்கள் அதிலும் குறிப்பாக 'டாக்டரை கேளுங்கள்' பகுதி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
இன்று, அரசியல் பிரமுகராக, அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளராக செயலாற்றும் என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்தி இருக்கிறது. என்னை போன்ற அரசியல்வாதிகளுக்கு 'பேச்சு பேட்டி அறிக்கை', 'டவுட் தனபாலு', 'டீ கடை பெஞ்ச்', 'பக்க வாத்தியம்' ஆகியவை தவிர்க்க முடியாத பகுதிகள்.
தினமலரின் ஈரோடு பதிப்பை தொடங்கி வைத்த எம்.ஜி.ஆர், சென்னையிலும் பதிப்பு வரவேண்டும் என தனது நீண்ட நாள் ஆசையை வெளிப்படுத்தினார் என்றும், அ.தி.மு.க.,வின் முதல் தேர்தலான திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலில், இரண்டு மாதங்கள் பெரும் சிரமத்திற்கு இடையே செய்தி சேகரித்த தினமலர் நிருபர்களை அழைத்து, உழைப்பை பாராட்டினார் என்றும் படித்திருக்கிறேன். தொடர்ந்து, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிசாமியின் ஆட்சி கால சாதனைகளை மக்களுக்கு எடுத்து சென்றதும் தினமலர் தான்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வெளிப்படை தன்மையுடன் வெளியிட்டு, பல அரசு ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக திகழ்கிறது தினமலர். பத்திரிகை உலகில் அறத்தையும் தரத்தையும் சரியாகக் கடைபிடிக்கும் நாளிதழ்களின் மகுடமாக திகழ்வது தினமலர்.
பெருமை வாய்ந்த ஆசிரியர்களால் நடத்தப்படும் தினமலர், இன்னும் நுாறாண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் குடும்பத்தில் ஒருவராக திகழும் என்பதில் ஐயமில்லை!
விஞ்ஞானம், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சாத்தியம் இருப்பதாக கூறுகிறது. மக்கள் குடியேற்றம் கூட நடக்கலாம். அப்படி வரும் காலம் செவ்வாய் கிரகத்திலும் முதல் தமிழ் பதிப்பாய் தினமலர் திகழும் என்றே எண்ணுகிறேன்.
வாழ்க தமிழ்! வளர்க தினமலர் தொண்டு!
- டாக்டர் பா. சரவணன்
நிறுவனர், சரவணா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,மதுரை
அ.தி.மு.க., மருத்துவரணி மாநில இணைச்செயலாளர்
மேலும்
-
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்வு; 2 நாட்களில் ரூ.7,600 அதிகரித்து புதிய உச்சம்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!