'இ.சி., - 06' இ.வி., யமஹாவின் முதல் மின்சார ஸ்கூட்டர்
'யமஹா' நிறுவனம், 'இ.சி., - 06' என்ற அதன் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, மும்பை, புணே ஆகிய நகரங்களில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டர் 'ரிவர் இண்டி' மின்சார ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை விட, 'இ.சி., - 06' ஸ்கூட்டரின் விலை, 22,000 ரூபாய் அதிகம்.
இதில், 4 கி.வாட்.ஹார்., லித்தியம் பேட்டரி மற்றும் ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சார்ஜில், 169 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ளலாம். டாப் ஸ்பீடு 79 கி.மீ., ஆகும். 480 வாட் வீட்டு சார்ஜரில், பேட்டரியை முழு சார்ஜ் செய்ய, 8 மணி நேரம் எடுக்கிறது. பேட்டரிக்கு, 3 ஆண்டு அல்லது 30,000 கி.மீ., வரை உத்தரவாதம் கிடைக்கிறது.
'வாட்டர் ப்ரூப்' மோட்டார், பேட்டரி, இதர எலக்ட்ரானிக்ஸ் இயந்திரங்கள், 'கலர்டு' எல்.சி.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, டெலிஸ்கோப்பிக் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள், மூன்று ரைட் மோடுகள், 24.5 லிட்டர் பூட் ஸ்பேஸ், டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வந்துள்ளன.
@block_B@ பேட்டரி - 4 கி.வாட்.ஹார்., மோட்டார் பவர் - 8.9 ஹெச்.பி., டார்க் - 26 என்.எம்., ரேஞ்ச் - 169 கி.மீ., டாப் ஸ்பீடு - 79 கி.மீ., கிரவுண்ட் கிளியரன்ஸ் - 145 எம்.எம்., பூட் ஸ்பேஸ் - 24.5 லிட்டர் எடை - 132 கிலோblock_B
@block_B@ விலை - ரூ. 1.68 லட்சம்block_B
மேலும்
-
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்