விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

2

வாஷிங்டன்: ஈரானின் தெற்கு கடற்ரையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய அந்நாட்டு ட்ரோனை அமெரிக்க கடற்படை போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.



மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஈரான் உடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ''அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்" என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார்.


இந்த சூழலில், ஈரானின் தெற்கு கடற்ரையில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய அந்நாட்டு ட்ரோனை அமெரிக்க கடற்படை போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. இது குறித்து அமெரிக்க கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஹாக்கின்ஸ் கூறியதாவது:


ஆபிரகாம் லிங்கனின் F-35C போர் விமானம், விமானம் தாங்கி கப்பல் அதில் இருந்த பணியாளர்களையும் பாதுகாக்கவும் ஈரான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்க படையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எந்த உபகரணங்களும் சேதமடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தற்போது ஈரான்- அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisement