அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி; வெள்ளை மாளிகை தகவல்
வாஷிங்டன்: ''எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் '' என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் கரோலின் லீவிட் நிருபர்களிடம் கூறியதாவது: ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதை நிறுத்துவது மட்டுமல்லாமல், அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டது. அதுமட்டுமின்றி ஒருவேளை வெனிசுலாவிடமிருந்தும் எண்ணெய் வாங்குவதற்கு உறுதியளித்துள்ளது. இது அமெரிக்காவிற்கும் அமெரிக்க மக்களுக்கும் நேரடிப் பலனைத் தரும்.
எரிசக்தி, போக்குவரத்து மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது மற்றொரு சிறந்த வர்த்தக ஒப்பந்தம். அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி நேரடி பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை அதிகரிக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டது. பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் நல்ல உறவை கொண்டுள்ளனர். இவ்வாறு கரோலின் லீவிட் கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள பொது துறை நிறுவங்களை வித்து 1000 பில்லியன் கூட முதலீடு பண்ணலாம் .
இந்தியா கேட்டை விட அழகா ஒன்னு கட்டப்போறேன். டொனால்ட் டிரம்ப்..
இனி அடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்பு எச்.ஒன்.பி. தாரர்களுக்கு நேர்ந்திருக்கும் கஷ்டங்களை தீர்ப்பார் சீக்கிரமே அவர்களுக்கு இந்தியாவில் எல்லா அமெரிக்க அலுவலகங்களிலும் ஸ்டாம்பு குத்த அனுமதிஅளித்திடுவார் அவர்கள் அமெரிக்க திரும்ப சென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை எந்த தடையில்லாமல் தொடர்ந்து செய்ய துவங்கும் அவர்கள் தங்கள் குடும்பத்துடவுடன் செல்லவும் அனுமதிப்பார் இது விரைவில் நடக்கும் பிரதமர் மோடி அவர்கள் இதற்க்கு தீவிர முயற்சிகளை எடுப்பார்
நேற்று இதே கருத்தை நான் சொன்னபோது கிண்டல் செய்தார்கள்
ட்ரம்ப் தான் பொய் சொல்லிட்டு இருந்தார். இப்போது அடிவருடிகள்..!
பொய் சொல்வது சாத்தான்களின் வழக்கமான வேத மொழி.
இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லாததையு ம் சொல்லி ஜப்பான் பிரதமரை பதவி இழக்க செய்தனர்! மோடி ஜி இத்தகைய சதியில் சிக்க மாட்டார்
கச்சா எண்ணையை வெனிஸுலாவில் இருந்து இறக்குமதி செய்து சுத்திகரித்து ஐரோப்பா விற்கு விற்றாலே நம் நாடு விரைவில் வல்லரசாகி விடும் மோடி எடுத்த ஒரு அறிவார்ந்த நடவடிக்கை இந்த வர்த்தக ஒப்பந்தம்
அண்மையில் ஜெர்மனியே அமெரிக்க அதிபரின் கொள்கைகளை நம்பாமல் முதலுடு செய்த பல பில்லியன் தங்க கட்டிகளை திரும்ப பெறப்போகுது, இந்தியா இப்போ 500 பில்லியன் கொட்டப்போகுது, டிரம்ப் சொல்வதெல்லாத்துக்கும் தலையாடுவது, இப்போ ட்ரண்ட் ஆகா இருப்பது எப்ஸ்டீன் வீடியோலாஜி சிஸ்டம் ஆகா இருக்குமோ?
500 பில்லியன் டாலர் கொள்முதல் என்பது சில ஆண்டுகளில் நடைபெறும் ஒரே ஆண்டில் அல்ல.மேலும்
-
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தல்
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்; அதிபர் டிரம்ப் தகவல்
-
லிபியா முன்னாள் அதிபரின் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
-
ஆர்எஸ்எஸ் முகாம் நடத்திய பள்ளிக்கு நோட்டீஸ் ஏன்? பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு முதல் உலக கோப்பை பயிற்சி போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வு (பிப்.,04)!
-
கர்நாடகா அமைச்சர் மீது ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் புகார்; சட்டசபையில் பாஜ எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்