தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கன்வாடி ஊழியர் சங்கம் மறியல்; 560 பேர் கைது
கிருஷ்ணகிரி: கடந்த, 2021 தேர்தல் அறிக்கையில், தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி அச்சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் நோஹிரா தலைமை வகித்தார்.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க., அரசை கண்டித்தும் கோஷங்களும் எழுப்பினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்துாரி, மாவட்ட தலைவர் முனியம்மா, மாவட்ட செயலாளர் பார்வதி, பொருளாளர் அனிதா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற, 555 பெண்கள் மற்றும், 5 ஆண்கள் உள்பட, 560 பேரை கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து
-
டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு
-
திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு
-
அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு