நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 580 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 03) ஆபரண தங்கம் கிராம், 14,270 ரூபாய்க்கும், சவரன், 1,14,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 04), தங்கம் விலை கிராமுக்கு, 630 ரூபாய் உயர்ந்து, 14,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 5,040 ரூபாய் அதிகரித்து, 1,19,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 320 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் அதிகரித்து, 3.20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு 580 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 5,040 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 4,640 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
அரசு விலை நிர்ணயிக்க வேண்டும்
தங்கம் ஒழிக்க வேண்டிய ஒன்று, கடந்த கால தங்கம் சேமிப்பு. நிகழ்கால/வரும்கால தங்கம் மனித உழைப்பின் சுரண்டல், மக்கள் தெளிவு பெற வேண்டும்!.மேலும்
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்
-
விவேக் ராமசுவாமி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை
-
எனக்கு சவக்குழி தோண்ட முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
தேர்தல் அறிக்கை இணையதளம் : வெளியிட்டது தவெக