மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதி; திமுகவுக்கு நயினார் கண்டனம்

1

சென்னை: மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதியை பயன்படுத்துகிறது. திமுக இனி தப்பித் தவறி கூட சமூகநீதி எனும் வார்த்தையை உரைக்கக் கூடாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அன்னதானத்திற்கு வந்த நரிக்குறவரின குழந்தைகளைத் திருக்கோவில் உள்ளேயே முதலில் அனுமதிக்காததோடு, பின் உணவும் வழங்காமல் பசியோடு அனுப்பியிருக்கிறது திமுக கும்பல். வயிற்றுப் பசிக்காக வந்த குழந்தைகளைக் கோவில் உள்ளே வந்தால் அடித்துவிடுவதாக மிரட்டுவது தான் திமுகவின் பகுத்தறிவா?

ஏழை எளிய பழங்குடியினக் குழந்தைகளைக் கோவிலுக்குள் வரவிடாமல் தடுப்பதும், அன்னதான உணவை சாப்பிட விடாமல் தடுப்பதும் தான் திமுகவின் சமூக நீதியா? சட்டசபையில் சமநிலையை உறுதி செய்வதில்லை, சமூகத்திலும் சமநிலையை உறுதி செய்வதில்லை, இது தான் சபாநாயகர் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் செய்யும் செயலா? வெட்கக்கேடு.



@twitter@https://x.com/NainarBJP/status/2018933167470887021?s=20twitter
பசுந்தோல் போர்த்திய புலியைப் போல சமூகநீதி காவலர்களாய் மேடையெங்கும் வேடமிடுவது, பின் சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களைத் தூக்கி வீசியெறிவது என நாடகமாடும் ஆதிக்க மனநிலை திமுக இனி தப்பித் தவறி கூட சமூகநீதி எனும் வார்த்தையை உரைக்கக் கூடாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement