டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,600 ஒரு சப்போர்ட்டாக உருவாகியுள்ளது
நாள் முழுவதுமே பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 48 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு, அதிகபட்சமாக 1.73 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி இந்தியா எப்.பி.ஐ., 150' குறியீடு குறைந்தபட்சமாக 0.20 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 13 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்' குறியீடு, அதிகபட்சமாக 2.66 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 5.87 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,291 பங்குகளில், 2,151 ஏற்றத்துடனும்; 1,044 இறக்கத்துடனும்; 96 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. 25,600-க்கு மேல் நிறைவடைந்திருப்பதாலும், மொமெண்டம் இண்டிகேட்டர்கள் ஏற்றத்துக்கு ஆதரவாக இருப்பதாலும் 25,900 என்ற லெவல்வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 25,600 என்பது தற்போது ஒரு சப்போர்ட்டாக உருவாகியுள்ளது. இந்த சப்போர்ட்டை உடைத்தால் அதற்கு கீழே 25,300 வரையிலும் சென்று திரும்புவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது. செய்திகளே சந்தையின் திசையை நிர்ணயிக்கும்.
மேலும்
-
சசி தரூர் மகன் உட்பட 300 பேரை பணி நீக்கம் செய்தது வாஷிங்டன் போஸ்ட்!
-
சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை
-
ஆபீசை சாணத்தால் சுத்தம் செய்த விவகாரம்; அதிகாரிகளுக்கு தேசிய ஆணையம் கெடு
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து