கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் சரிவு
பி ட்காயின் முதலீட்டில் விற்பனை அழுத்தம் அதிகரித்த காரணத்தால், கிரிப்டோகரன்சி சந்தை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. ஜனவரி 29ம் தேதி துவங்கி ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 45.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக 'காய்ன் கெக்கோ' தெரிவித்துள்ளது.
'காயின் கெக்கோ' என்பது கிரிப்டோகரன்சி சந்தையின் விலை, சந்தை மூலதனம், வர்த்தக அளவு, மற்றும் போக்குகளைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய இணையதளமாகும்.
நேற்றைய வர்த்தகத்தில், மாலை 6:45 மணி நிலவரப்படி, ஒரு பிட்காயின் மதிப்பு, கிட்டத்தட்ட 68.75 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது. இது கடந்த ஏழு தினங்களில் 15.40 சதவீத வீழ்ச்சியாகும். கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில், முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உள்ளதால், அவர்களின் விற்பனை வேகம் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பிட்காயினின் விலை கடும் சரிவை சந்தித்திருப்பது, முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கு முதலீட்டாளர்கள் மாறியதும் கிரிப்டோகரன்சி வீழ்ச்சிக்கு காரணம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும்
-
மேற்கு வங்கத்தில் தனித்து களம் காண்கிறது காங்கிரஸ்
-
கிறிஸ்துவர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலத்தை பாதுகாக்க உத்தரவு
-
அமைச்சர் தியாகராஜன் பெயரை கூறி பல கோடி ரூபாய் மோசடி : முன்னாள் உதவியாளர் மனைவியுடன் கைது
-
ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்
-
மத்திய அரசு எங்களை பேச அனுமதிக்கவில்லை: கார்கே
-
விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்