புதிய ஏ.ஐ., வசதி அறிமுகத்தால் அதல பாதாளத்தில் ஐ.டி., பங்குகள்
பணியிடத்தில் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் முழுமையான தானியக்க வசதிகள் கொண்ட புதிய ஏ.ஐ., வசதிகளை 'ஆந்த்ரோபிக்' நிறுவனம் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்திய ஐ.டி., நிறுவனங்களின் சந்தை மதிப்பு நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது.
நேற்றைய வர்த்தக முடிவில் நிப்டி ஐ.டி., குறியீடு 5.87 சதவீதம் சரிவில் முடிந்தது. இன்போசிஸ் பங்கு விலை 7.37 சதவீதம் சரிந்து 1,534 ரூபாய்க்கு வர்த்தகமானது.
டி.சி.எஸ்., கோபோர்ஜ், எல்.டி.ஐ., மைண்ட்ரீ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முறையே 6.99 சதவீதம், 6.02 சதவீதம் மற்றும் 5.84 சதவீதம் சரிந்து வர்த்தகத்தை முடித்தன.
'ஆந்த்ரோபிக்' நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய ஏ.ஐ., அமைப்பு, முழு வணிக செயல்முறைகளையும் தானாக கையாளும் திறன் கொண்டதாக இருப்பதால், இந்திய சந்தைகள் மட்டுமல்லாமல், உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரிய மென்பொருள் சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் தேவைகள் குறையக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, உலகளாவிய ஐ.டி., மற்றும் மென்பொருள் பங்கு நிறுவனங்களையும் சேர்த்து சுமார் 25.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை அழுத்தத்துக்கு உள்ளானது.
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் நேரடியாக ஆபத்தை சந்திக்கவுள்ள நிறுவனங்களின் பங்குகளில் இருந்து முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறியதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
மேலும்
-
சசி தரூர் மகன் உட்பட 300 பேரை பணி நீக்கம் செய்தது வாஷிங்டன் போஸ்ட்!
-
சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை
-
ஆபீசை சாணத்தால் சுத்தம் செய்த விவகாரம்; அதிகாரிகளுக்கு தேசிய ஆணையம் கெடு
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து