சிவகங்கையில் நலத்திட்ட உதவி
சிவகங்கை: சிவகங்கையில் 2,097 பேருக்கு ரூ.3.98 கோடிக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கையில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி வரவேற்றார். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், நகராட்சி தலைவர் துரை ஆனந்த் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், சமூக நலத்திட்ட தாசில்தார்கள் பங்கேற்றனர்.
விழாவில் முதியோர் உதவி தொகை 408, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை 727, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் உதவி தொகை 256, முதிர்கன்னி உதவி தொகை 16, பேட்டரி சக்கர நாற்காலி, மடக்கு நாற்காலி, பயிர்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் கடன், புதிய ரேஷன் கார்டு, உலகம் உங்கள் கையில் திட்டத்தில் லேப்டாப்' என ஒட்டு மொத்தமாக மாவட்ட அளவில் 2,097 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 98 லட்சத்து 48 ஆயிரத்து 387 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தார் நன்றி கூறினார்.
மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து
-
டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு
-
திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு
-
அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு