மது அருந்தி காரில் துாங்கிய ஓட்டுநர் இறப்பு
பல்லாவரம்: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன், 44; கார் ஓட்டுநர்.
இவர், பல்லாவரம் கண்டோன்மெனட் பகுதியில், அப்துல் மஸ்ஜித் என்பவருடன், காரில் அமர்ந்து, நேற்று முன்தினம் இரவு மது அருந்தியுள்ளார். போதையானதும் இருவரும் காரிலேயே உறங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, அப்துல் மஸ்ஜித் எழுந்து பார்த்தபோது, பரணிதரன் காரிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து, அவரை தாம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பரணிதரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார், பரணிதரன் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நெய் விற்பனை மோசடி; தேவஸ்தான அதிகாரி கைது
-
நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைவு
-
கறிக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து
-
டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு
-
திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் கால அவகாசம் 18 நாட்களாக குறைப்பு
-
அதிபர் டிரம்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு
Advertisement
Advertisement