பள்ளி கல்லுாரி செய்திகள்

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி போக்குவரத்து பாதுகாப்பு கிளப் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நோடல் அதிகாரி காளிராஜன் வரவேற்றார். வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உதவும் வழிமுறைகள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பாதுகாப்பு சிக்னல்கள் பற்றிக் கூறினார்.

ஏற்பாடுகளை ஞான வேலாயுதம், பேராசிரியர் கந்தசாமி செய்தனர். என்.எஸ்.எஸ் அலுவலர் அய்யப்பன் நன்றி கூறினார்.

Advertisement