தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் பெண்கள் பிரிமியர் லீக் இறுதிப்போட்டி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,05)!

1

நமது நிருபர்




தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 05) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.


* தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடக்க உள்ளது.


* சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


* பார்லிமென்டின் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் விவாதம் அனல் பறக்கும்.


* தங்கம் விலை உயர்வை சந்தித்து வருகிறது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 630 ரூபாய் உயர்ந்து, 14,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 5,040 ரூபாய் அதிகரித்து, 1,19,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு 4,640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


* குஜராத், வதோதராவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்களூரு அணியை டில்லி அணி எதிர்கொள்கிறது.

Advertisement