அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் நகரம்; எலான் மஸ்க் நம்பிக்கை
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நகரை உருவாக்குவதற்கு முன்பாக, அடுத்த 10 ஆண்டுக்குள் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்கி விடலாம் என்று தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது; நிலவில் ஒரு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்க 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால், 10 ஆண்டுக்குள் நிலவில் ஒரு நகரத்தை உருவாக்க நம்மால் முடியும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நோக்கம் எப்போதும் மாறாதது.
கோள்கள் ஒவ்வொன்றும் 26 மாதங்களுக்கு ஒருமுறை நேர்கோட்டில் வரும்போது மட்டுமே செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் செய்ய முடியும். அதுவும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல 6 மாத காலமாகும். ஆனால் நிலவுக்கு நாம் ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை விண்கலத்தை ஏவ முடியும். 2 நாளில் சென்று விட முடியும்.
இதன்மூலம், செவ்வாய் கிரகத்தை விட நிலவில் ஒரு நகரத்தை மிக வேகமாக உருவாக்க முடியும். அதே சமயம், 5 முதல் 7 ஆண்டுகளில் ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்திலும் ஒரு நகரத்தை உருவாக்குவதற்கான பணிகளும் தொடங்கப்படும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் ஜென் 2 நேரடி கைபேசி செயற்கைக்கோள் திட்டத்திற்கு இந்தியா இன்னும் அனுமதி வழங்கவில்லை. டெர்மினல் அடிப்படையிலான ஜென் 1 பிராட்பேண்ட் திட்டத்திற்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. ஒழுங்குமுறை குறைபாடுகள், ஒதுக்கப்படாத அலைக்கற்றை மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள்
இதில் உள்ளன என்றும் அதனால்தான் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று நம் அதிகாரிகள் கூறினர்.
இது நடந்தால் அதன் விளைவுகள் இப்படி இருக்குமா??? அங்கு பிராணவாயு இல்லை??? மனிதன் எப்படி பிராணவாயு இல்லாமல் அங்கு நடமாடமுடியும்???இங்கிருந்து கொண்டு செல்லும் பிராணவாயு எவ்வளவு நாளைக்கு தாக்குப்பிடிக்கும்??
இந்த இயற்கைத்தாய் தந்த பூமி, இங்கே மனிதர் வாழ வலி செய்யுங்க சார். அங்கே 6 மாதத்துக்கு வாழமுடியாது சார்.
வானில் நீந்தும் நிலவில் நாளை பள்ளிக்கூடம் நடக்கும்.....
இது ஸ்கொயர் கம்பெனிக்கு தெரியுமா?
ஆக்ஸிஜன் இல்லாமல் எப்படி அமைப்பது, அந்தத் திட்டங்கள் வழங்கப்பட்டால் இது சுவாரஸ்யமாக இருக்கும்.
அங்கு ஒலிம்பிக்ஸ் நடந்தால் தூரம் தாண்டுதளுக்கு பதிலாக குறைவு தாண்டுதல் இருக்கும்
நட்சத்திர போரை உண்டாக்கி விடாதீர்கள். சில பேர் அங்கேயும் குண்டு போட முயற்சிப்பான். இங்கே வந்தே பாரத் ரயில் மீதே மூடன் கல் வீசுகிறான்.
ஏன் இந்த விபரீத முயற்சி, யாருக்கு என்ன பலன்?
பூமியை நாறடிச்சது போறாதுன்னு ஆகும் உங்க கைய்ய வரிசையை காட்ட போரிங்க்ளா. மத தீவீர வாதிகள் தான் முதலில் போய் நாறடிக்க போராங்க.மேலும்
-
ஏஐ மாநாடு நடப்பதால் 380க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
-
இதெல்லாம் ரொம்ப டூ மச்; முன்னாள் அதிபர் பேசியது பிடிக்காததால் சுவிட்சர்லாந்துக்கு வரி விதித்தார் டிரம்ப்
-
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மத்திய அரசு
-
திமுக அரசுக்கு ஆதரவான மனநிலை: முதல்வர் ஸ்டாலின்
-
தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்