தாய்லாந்து பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் காயம்

பாங்காக்: தாய்லாந்து பள்ளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.


தாய்லாந்தின் சாங்க்லா மாகாணத்தில் உள்ள பதோங் பிரதான் கிரிவாத் என்ற இடத்தில் உள்ள பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த மர்ம நபர், துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளே புகுந்தார். இதற்காக போலீஸ் ஒருவரிடம் இருந்து அந்தத் துப்பாக்கியை திருடி வந்துள்ளார். மேலும் அந்த மாணவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது.இதனை பார்த்த மாணவர்கள்,அங்கிருந்து தப்பி ஓடினர்.

பள்ளி இயக்குநர் மற்றும் மாணவர்களை பிணைக்கைதிகளாக அந்த நபர் பிடித்துவைத்து கொண்டார். உள்ளே அவர் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளி இயக்குநர் காயம் அடைந்தார். ஒரு வழியாக அவர் அங்கிருந்து தப்பித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 வயதான சிறுவன் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.


தகவல் அறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெற்றோர்கள், பள்ளியின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த நபர்,ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போலீசில் சரண் அடைந்தார். விசாரணையில் அவர் 18 வயதான இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

Advertisement