பிளஸ் 2 மாணவன் வைத்திருந்த கஞ்சாவை தீ வைத்து எரித்த தலைமை ஆசிரியர்; கலெக்டரிடம் போன புகார்
திருப்பூர்: பள்ளி வளாகத்தில், மாணவனின் புத்தக பையிலிருந்து எடுக்கப்பட்ட கஞ்சாவை எரியூட்டி, உரிய விசாரணை நடைபெறவிடாமல் தடுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, திருப்பூர் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் - கொங்கு மெயின் ரோட்டிலுள்ள மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 2 மாணவனின் புத்தக பையிலிருந்து, டிச., 19ம் தேதி, கஞ்சா மற்றும் கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட் இருந்தது கண்டறியப்பட்டு, அவற்றை தலைமை ஆசிரியர் பறிமுதல் செய்தார். சம்பந்தப்பட்ட மாணவனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய தலைமை ஆசிரியர், உரிய விசாரணை நடத்தாமல், கஞ்சாவை எரியூட்டியதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி, அம்மாணவனிடம் எழுதி வாங்கிய மன்னிப்பு கடித நகலை இணைத்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனுவாக அளித்தார்.
மாணவனிடம் கஞ்சா இருந்தது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அளித்து விட்டு, கஞ்சாவை போலீசில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், பறிமுதல் செய்த கஞ்சாவை, பள்ளி வளாகத்துக்குள்ளேயே தலைமை ஆசிரியர் எரியூட்டியுள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கஞ்சா புழக்கம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாளிடம் கேட்டபோது, ''மாணவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவருக்கு எவ்வித போதை பழக்கமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவரது சகோதரருக்கு, இப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. அவர் புத்தக பையில் மறைத்து வைத்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
எதுக்கு அந்தோணியம்மா பொங்குது ?
உரிய விசாரணை நடந்தால் கஞ்சா கொடுத்தது யார் என்ற உண்மை வெளிவந்து விடாதா? அப்பா குடும்பத்துக்கு விசுவாசமான தலைமை ஆசிரியர். அவருக்கு அடுத்த வருடம் திமுக விருது வழங்கி கௌரவிக்கும்.மேலும்
-
கடன் வசதி, வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தும் ராஜஸ்தான், உ.பி., பீஹார்
-
விவசாயிகள் நலனை விற்ற காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
-
அமைச்சர் துரைமுருகனுக்கு அப்பல்லோவில் தொடர் சிகிச்சை!
-
ரயிலில் இருந்து விழுந்த மும்பை நபர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவியும் இறந்த சோகம்
-
திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ்
-
சட்டசபை தேர்தல் பணிகள் ஆய்வு; சென்னையில் தேர்தல் கமிஷனின் 7 பேர் குழு ஆலோசனை